எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அதீதச் சிந்தனை! மனம் மயங்குதே... கிட்டத்தட்ட 5 ஆயிரம்...

அதீதச் சிந்தனை!

மனம் மயங்குதே...

கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஆண்டுகளில் அடைய முடியாத விஞ்ஞான வளர்ச்சியை, மனிதகுலம் கடந்த 50 ஆண்டுகளில் எட்டிப்பிடித்திருக்கிறது. அறிவு வளர்ச்சியும் எங்கேயோ போய் நிற்கிறது. அதே நேரத்தில் ‘அதிகப் படிப்பு உடலுக்கு இளைப்பு’, ‘அறிவு பெருத்தவன்நோவு பெருத்தவன்’ என்கிற மாதிரியான பழமொழி களையும் சற்றே யோசித்துப் பார்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம்.அறிவென்றால் என்ன? சிந்தனையாற்றல். அறிவின் மிக முக்கிய கட்டம் சிந்திப்பது. சிந்தனை என்றால் எண்ணம்.

அந்த எண்ணம் எதற்காக? ஒரு நபரை மிகச்சிறந்த அறிவாளியாக உருவாக்க... அதன் தொடர்ச்சியாக வாழ்க்கையை நல்ல முறையில்வாழ்ந்து முடிக்க...இன்று எல்லா துறைகளிலும் அத்தகைய அறிவாளிகளைப் பார்க்க முடிகிறது. அவர்களது சிந்தனையாற்றல் பிரமிக்கவைக்கிறது. சிந்தனை சக்திக்கு ஒரு தோற்றம், ஒரு வளர்ச்சி மற்றும் ஒரு முடிவு அவசியம். எழுகின்ற எண்ணங்கள் வெறும் தத்துவங்களாகமட்டுமே பேசப்படாமல், செயல்பாடுகளாக மாற வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் குழப்பங்களே மிஞ்சும்!

எம்.டெக். முடித்துவிட்டு, பி.ஹெச்டி. படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிற தன் மகள் தர்ஷினியுடன் என்னை சந்திக்க வந்தனர் அவரதுபெற்றோர். மகளையும் மனைவியையும் வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, அவர்கள் சார்பாக எல்லா விஷயங்களையும் முன்வைத்தார் அப்பா. ‘‘தர்ஷினி எங்களுக்கு ஒரே பொண்ணு. எங்க பரம்பரையிலேயே அதிகம் படிச்சவ. எம்.டெக். முடிச்சதும் ஒரு பெரியகம்பெனியில வேலை கிடைச்சது. ஆனா, ‘மேல படிக்கப் போறேன்’னு சொல்லி சேர்ந்த வேகத்துல அந்த வேலையைத் தூக்கிப் போட்டுட்டுவந்துட்டா. ‘சரி... படிக்கத்தானே ஆசைப்படறா’னு நாங்களும் அவ போக்குல விட்டுட்டோம்.

24 மணி நேரமும் இன்டர்நெட்டே கதியா கிடக்கறா. காலையில 6 மணி வரைக்கும் கம்ப்யூட்டர்ல ஏதோ வேலை பார்த்துட்டு, அதுக்குப்பிறகுதான் தூங்கப் போறா. நேரத்துக்கு சாப்பிடறது மில்லை. ‘சாப்பிடணுமே’னு எதையோ கொஞ்சம் கொறிச்சிட்டு மறுபடி தன் ரூமுக்குள்ளபோய் அடைஞ்சுக்கிறா. ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்கனு வெளியுலகத் தொடர்பே இல்லை. கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு வரன்பார்த்தா, ஒவ்வொரு வரனைப் பத்தியும் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கடைசியில தட்டிக் கழிச்சிடறா. என்ன கேட்டாலும், நீளநீளமாவியாக்கியானம் பண்றா. ரொம்ப புத்திசாலியான பொண்ணு. 8 வயசுலயே ஏகப்பட்ட திருக்குறள்களுக்கு விளக்கம் சொல்வா. அவளோடஅறிவைப் பார்த்து வியந்து போய் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தேன்.

ஒரு புத்தகம் விடாமப் படிச்சு, அதுல உள்ள சாரத்தை எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்வா. அவ விருப்பப்படியே பி.இ., எம்.டெக். படிக்கவச்சோம். படிப்பை முடிச்சு வேலைக்குச் சேர்ந்ததும் அவளுக்குப் பொறுப்பு கூடினதா நினைச்சு, கல்யாணப் பேச்சையும் ஆரம்பிச்சோம்.ஆனா, வேலை பார்த்த இடத்துல எல்லார்கூடவும் பிரச்னை. பொறுமையில்லை. ரெண்டே மாசத்துல வெளியில வந்துட்டா. இப்ப அவஉண்டு, அவ கம்ப்யூட்டர் உண்டுனு ஒரு ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கா. உள்ளே போனாலே கத்தறா. ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான்இங்கே கூட்டிட்டு வந்திருக்கோம். என்னனு பாருங்க மேடம்...’’ என்றார்.தர்ஷினியின் அப்பா சொன்ன அத்தனை தகவல்களையும் வைத்துப்பார்த்த போது, இது அதீதச் சிந்தனையின் அறிகுறி என்பது புரிந்தது.

பொதுவாக 14, 15 வயதில் ஆரம்பிக்கிற இந்தப் பிரச்னை 21 வயதில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். எல்லாவற்றுக்கும் அதிகமாக சிந்திப்பார்கள். நண்பர்கள், உறவுகள் என எல்லோரையும் விட்டு விலகி, தனிமைப்படுத்திக் கொள்வார்கள். சின்ன விஷயத்துக்குக் கூட எரிச்சலடைவார்கள். பெண் குழந்தைகளாக இருந்தால், குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது போன்ற தமது அன்றாட, சாதாரணக்கடமைகளைச் செய்யக்கூட கவனமற்று இருப்பார்கள். ஆண்பிள்ளைகளாக இருந்தால் கவலைகளும் குழப்பங்களும் அதிகரிப்பதால் புகை,மதுப்பழக்கங்களுக்கு அடிமையாவதுடன், தூக்கமின்றி தவிப்பது, பெற்றோரிடம் பகைமை பாராட்டுவது போன்றவையும் வெளிப்படும்.

அவர்களது சிந்தனை அதிகமாக இருக்குமே தவிர, செயல் வடிவம் பெறாது. அப்படியில்லாமல், வெறும் வியாக்கியானங்களாகவேதொடர்ந்தால் பெற்றோர் எச்சரிக்கையாக வேண்டும். அயோடின் குறைபாடு காரணமாக தைராய்டு பிரச்னை வரும். முன்பெல்லாம்மலைப்பிரதேசங்களில் வாழ்பவர்கள் மட்டும் அயோடின் உப்பு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது மாறி, இன்று தைராய்டு அதிகரிப்புப்பிரச்னை காரணமாக எல்லோருமே அயோடைஸ்டு உப்பு உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறோம். வைட்டமின் டி குறைபாடு விஸ்வரூபம்எடுத்து நிற்கிறது. எலும்புத்திறன் குறைந்து, இருமினால், தும்மினால்கூட எலும்புகள் சிதைந்து போகிற ஆபத்து பலருக்கும் இருக்கிறது.வெயில் படாமல் வேலை செய்கிறவர்கள் மட்டுமின்றி, பிறந்த பச்சிளம் குழந்தைக்குக் கூட வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும்,அதை மருந்துகள் மூலம் ஈடுகட்ட வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்த இரண்டையும் போல மூளையில் சுரக்கும் சில முக்கிய ரசாயனக் குறைபாடுகளைப் பற்றியும் பேச ஆரம்பித்திருக்கிறோம்.டோபமைன், செரட்டோனின், ஆக்சிடோசின், எபிநெப்ரின் (Epinephrine), நார் எபிநெப்ரின் உள்ளிட்ட அந்த நுண்ணிய ரசாயனங்கள் சரியாகச்சுரக்காமல் போவதன் விளைவுகள்தான் இப்படியான மனமாற்றங்களுக்குக் காரணம். அதீதச் சிந்தனை, அதனால் வரும் குழப்பங்கள்,தூக்கமின்மை போன்றவற்றுக்கும்கூட இதுதான் காரணம். அது எந்த விஷயத்திலும் சிந்தனையை எல்லையற்று செலுத்தும். அந்தச்சிந்தனையில் தெளிவோ, முடிவோ இருக்காது. தூக்கத்தைக் கெடுக்கலாம். யாருடனும் பழகாமல் பற்றற்ற மனநிலையை உருவாக்கலாம்.தர்ஷினிக்கு இப்போது வயது 30.மகள் படிக்கிறாள் என ஏற்கனவே 15 வருடங்களை அவரது பெற்றோர் வீணடித்து விட்டனர்.

மகளின் நடவடிக்கைகளில் மாற்றங்களை உணர்ந்ததும், அது அசாதாரணமானது என அப்போதே அவர்கள் எச்சரிக்கை அடைந்திருக்கவேண்டும். 8 மணி நேரத் தூக்கம், வீட்டு மனிதர்களுடன் சிரிப்பு, பேச்சு, விளையாட்டு, நண்பர்களுடன் அரட்டை, உறவினர்களுடன் அன்புசெலுத்துதல் என சராசரியான விஷயங்களைத் தொலைத்துத் தனிமை யில் மூழ்கும் எந்தப் பெண்ணும் ஆணும் சாதாரணமானவர்கள்அல்லர். அவர்களிடம் காணப்படுகிற அதிகபட்ச சிந்தனையையும் தனிமைக்குள் புதைகிற விருப்பத்தையும் பார்த்து அறிவுஜீவித்தனமெனஅலட்சியப்படுத்தினால் அவர்கள் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகும் அபாயம் உண்டு’’ என்பதைப் புரிய வைத்து, அதிலிருந்து மகளை மீட்கவேண்டிய அவசரத்தை உணர்த்தினேன்.

பயிற்சி

உடற்பயிற்சி என்பதே இல்லாமல் பயிற்சி பிள்ளைகள் எந்நேரமும் கம்ப்யூட்டர் முன்னாடி பழி கிடக்கிறார்கள். நிஜ மனிதர்களுடன் பழகாமல், ஃபேஸ்புக், ட்விட்டர் என ஜீவனற்ற பிம்பங்களுடன் ஒன்றிப் போகிறார்கள். உடலுக்கு வேலை கொடுத்து உடற்பயிற்சி செய்கிற போதுசெரட்டோனின் என்கிற ஹார்மோன் ஊறும். சக வயதுப் பிள்ளைகளுடன் கட்டி உருண்டு விளையாடும் போது டோபமைன் பெருக்கெடுக்கும்.உறவினர்களுடன் உறவாடும் போது ஆக்சிடோசின் பேலன்ஸ் ஆகும். இதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்காமல் ‘படி... படி...’ எனப்புத்தகங்களுக்குள் புதையச் சொல்கிற போதும், திறந்த வெளியில் விளையாட வாய்ப்பின்றி, நான்கு சுவர்களுக்குள் கம்ப்யூட்டரேதுணையாக விடப்படுகிற போதும், மேற்சொன்ன எல்லா ஹார்மோன்களும் வற்றிப் போகும்.

பதின்ம வயதில் பிள்ளைகள் அரட்டையில் ஆழ்வதையோ, விளையாடுவதையோ தடுக்கத் தேவையில்லை. இரவில் கேம்ஸ், டி.வி.,இன்டர்நெட்டே கதியாக இருந்து, இரவைப் பகலாக்கும் போக்கு தெரிந்தால் அதை மாற்ற வேண்டும். மெலட்டோனின் என்கிற ஒருஹார்மோன் இருட்டில் மட்டுமே சுரக்கும். படபடக்கும் மனசுக்கு அமைதியளித்து, நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிற எண்ண ஓட்டங்களுக்கும்சற்றே ஓய்வளித்து, நித்திரை கொள்ளச் செய்ய அந்த ஹார்மோன் அவசியம். குறித்த நேரத்தில் தூங்கி, குறித்த நேரத்தில் விழிக்கபிள்ளைகளைப் பழக்க வேண்டியதும் அவசியம்.

பிள்ளைகளுக்கு வெறும் புத்தகங்களையும், தொழில்நுட்ப வளர்ச்சி களையும் மட்டுமே அறிமுகப்படுத்தாமல், அனுபவங்களையும்அறிமுகப்படுத்த வேண்டும். மால்களுக்கு அழைத்துச் சென்று பொழுதுகளை விரயமாக்காமல், பூங்கா, உறவினர்கள் வீடுகள் போன்றஇடங்களுக்குக் கூட்டிச் சென்று மனிதர்களோடு பழகும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

நாள் : 8-Oct-14, 1:46 pm

மேலே