எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர் / தோழிகளின் கவனத்திற்கு எறும்பு தேசத்தின் கொண்டை...

தோழர் / தோழிகளின் கவனத்திற்கு

எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள்----விரல் மாறும் தொடர்கதை ..படிக்கும் மற்றும் பயணத்தில் ஈடுபட்டு தொடர் கதையின் அடுத்தடுத்த பாகத்தை எழுத நினைக்கும் அனைத்து நண்பர்களும் ...நினைவில் கொள்க ..

1..முன் பதிவை எழுதி முடித்தவர் ...கதையை தளத்தில் பதிவு செய்தவுடன் அடுத்த படைப்பாளியை தேர்வு செய்து விடுகை மூலம் மட்டுமே தொடர்பு கொள்வார் ..

(அவசரப்பட்டு யாரும் நீங்களாகவே அடுத்த பாகத்தை எழுத வேண்டாம் ..இது சிரமத்தை ஏற்படுத்தும் ..தொடர் கதையின் தொடர்பை பாதிக்கும் ...விடுகை வந்தால் மட்டுமே நீங்கள் எழுதலாம்)

2..அடுத்த படைப்பை பதியும் வரை அந்த படைப்பாளி பெயர் வெளியே தெரியவராது ..

3.. குறைந்தது இரண்டு நாட்களுக்குள் கதையை பதிவு செய்து விட வேண்டும். ,

4. கதையை தொடர்பவர் எழுதபோகும் பகுதி முழுக்கமுழுக்க அவருக்கே சொந்தம் ..

5. மேலும் எழுதி முடித்தவர் தேர்ந்தெடுக்கும் அடுத்த நபர் அவருக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டாம்.

6 . தொடர்கதையின் அடுத்தடுத்த பாகத்தை சமர்பிக்கும் போது 'சிறுகதை' பகுதியில் சேருங்கள்.. இதையே எழுதும் / படிக்கும் அனைவரையும் பின்பற்ற சொல்லுங்கள்.

7 . ஒவ்வொரு பாகத்திருக்கும் ஏதாவது ஒரு புகழ் பெற்ற திரு நங்கையின் புகைப் படத்தை பதியவும்.. அவரைப் பற்றிய செய்தியும் இருந்தால் நலமே..

8. அடுத்தடுத்த பாகத்தை எழுத தேர்வு செய்யும் படைப்பாளிகள் ஒரு ஆண் ..ஒரு பெண் என சுழற்சி முறையில் இருந்தால் நன்றாக இருக்கும் .. அதுவும் இந்த கதையின் கருவிற்கு சுழற்சி முறை நல்ல அனுபவம் தரும்

9. படைப்பாளி கதையை பதித்த பின் அடுத்த படைப்பாளிக்கும் மேற்கண்டவற்றை விடுகை மூலம் தெரிவித்து விடுங்கள் .

10. யாருக்கு அடுத்த பாகத்தை தருகிறீர்களோ அவரின் பெயரை எனக்கு தனி விடுகை மூலம் தெரியப் படுத்துங்கள்...

ப்ரியமுடன்
கவிஜி

பதிவு : கவிஜி
நாள் : 10-Oct-14, 3:45 pm

மேலே