சத்திய மங்கலமா நீ சத்தியமாய் மங்களமா வித்தை விசாலாச்சி...
சத்திய மங்கலமா
நீ சத்தியமாய் மங்களமா
வித்தை விசாலாச்சி
நீ விற்பதென்ன சொல்லாச்சி.
பொத்திப் பொத்தி இங்கு
சேர்த்து வைத்த பொக்கிசங்கள்
கொத்தி எடுத்துன் கூட்டிலிட
மனம் வந்ததென்ன.
நித்திரை தான் தொலைத்து
நிதம் எழுதும் படைப்பைஎல்லாம்
முத்திரை இல்லையென்றோ
முழுத் துணிவாய் சுருட்டிவிட்டாய்.
சுத்தமாய் உன் மனம் இருப்பின்
சேர்த்தவர் பேர் சொல்லிவிடு
உத்தமியாய் களவெடுத்து தமிழ்
உலகுக்கு ஒளி கொடுக்க முனையாதே!