எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பணம் ............. போனதும் விமானம் வந்ததும் விமானம் மறக்க...

பணம்
.............

போனதும் விமானம்
வந்ததும் விமானம்
மறக்க முடியவில்லை
ஏழையாக பிறந்ததால்
நானபட்ட அவமானம்

வண்ண வண்ணக் காகிதம்
வதங்கியது என் வாலிபம்
எல்லாமே செய்தது இந்தப் பணம்
இல்லாமல் ஆனேன்
நடைப்பிணம்

எல்லாம் கழன்ற பட்ட மரம்
யாருமில்லா தனி மரம்
போட்டார்கள் பல கோஷம்
கண்டேனே பல வேஷம்
ஆடினார்கள் நல்ல ஆட்டம்

உயிரானவளும் ஆனால் மௌனம்
உயிரெடுக்க வந்தான் எமனும்
உறவுகள் என்னை பந்தாட
ஏறியது விமானம்
பறந்தது ஆகாயம்
வளைகுடா பயணம்

தொலைத்தேன் உறக்கம்
சிந்தினேன் இரத்தம்
ஆனாலும் விடவில்லை
என் ஊக்கம்
சேர்த்தேன் பணம் பணம்

இப்ப என் பையோ
கனம் கனம்
உறவுக் கடிதங்களோ
தினம் தினம்
உறவாட கூப்பிடுகிறார்கள்
ஊர் சனம் சனம்

பணமில்லா வாழ்க்கை
பூஜியம்
இதையறிய எதற்குடா
மியூசியம்
இதைப் புரிந்தால்
நீங்கதானடா
வாலிப சிங்கம்

வருத்தப்படாத
வாலிபர் சங்கம்
உங்களுக்கு இந்தக்
கவிதை சமர்ப்பணம்

#றியாஸ்முஹமட்

நாள் : 21-Nov-14, 10:05 pm

மேலே