எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பண்பாட்டு சின்னமானஅழகரை மணல்மேடு திருச்சியிலிருந்து சேலம் செல்லும்வழியில்46 கி.மீ....

பண்பாட்டு சின்னமானஅழகரை மணல்மேடு

திருச்சியிலிருந்து சேலம் செல்லும்வழியில்46 கி.மீ. தொலைவில் காவிரி கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம் அழகரை. அழகரையில் உள்ள மாந்தோப்பிற்குள் ஒன்றும், ஊரின் மையப்பகுதியில் ஒன்றுமாக இரண்டு மண்மேடுகள் உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை உப்பிலியர்கள் வாழ்ந்ததால் இம்மணல்மேடு உப்பிலியன் மேடு என்று அழைப்படுகிறது.

1946 - ல் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் இங்கு அகழ்வாய்வு நடத்தியதில் கிடைத்தப் பொருட்களை வைத்து மூன்று வகையான பண்பாட்டு மக்கள் வாழ்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதல் பண்பாட்டுக் காலம் கறுப்பு, சிவப்பு மண்பாண்டம் பயன்படுத்திய கி.மு. 3 - ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4 - ஆம் நூற்றாண்டு வரை ஆகும்.

இரண்டாவது பண்பாட்டுக்காலம் கி.பி. 4 - ஆம் நூற்றாண்டு முதல் 10 - ஆம் நூற்றாண்டு வரையிலான பளபளப்பாக்கப்பட்ட சிவப்பு மட்பாண்டங்கள் பயன்படுத்திய காலம்.

மூன்றாவது கி.பி. 10 - ஆம் நூற்றாண்டு முதல் 15 - ஆம் நூற்றாண்டுவரையிலான கண்ணாடி மற்றும் சுடுமண் அழகு பொருட்கள். சுடப்படாத சிவப்பு மட்பாண்டங்கள் பயன்படுத்திய காலமாகும்.

தொடர்ச்சியான பண்பாட்டு சின்னமாக அழகரை விளங்குகிறது.

பதிவு : nalina
நாள் : 26-Nov-14, 5:12 pm

மேலே