எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னில் எழுந்த சினிமா கோவத்தை அன்றே வைரமுத்து சொல்லிவிட்டார்.....

என்னில் எழுந்த சினிமா கோவத்தை அன்றே வைரமுத்து சொல்லிவிட்டார்.. கவிப்பேரரசு ஏன் என் ஆசான் என்றானார் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்..! அது இதுதான்.

“ நாம் திரையில் பார்க்க வேண்டியது நிர்வாண பெண்களை அல்ல. நிர்வாண நிஜங்களை..! ”

பொழுதுப்போக்கு என்ற் பெய்ரில் நம் நிகழ்காலத்தை மூடி மறைக்கும் செயல்கள் முறியறிக்கப்பட வேண்டும்..”

இலக்கியத்திற்கும் திரைக்கலைக்குமிடையே இருக்கும் அந்நியம் அழிந்துவிட வேண்டும்

ஆட்களுக்கு கதைகள் தயாரிப்பதை விட்டுவிட்டு இனிமேல் நாம் கதைகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தமிழ் திரையுலகம் தொழில் நுட்பத்தில் வளர்ந்திருக்கிற அளவுக்கு கதையிலோ கருத்திலோ வளரவில்லை என்பது ஒரு கசக்கின்ற நிஜமாகும்.. “


இப்படி சாட்டை சுழ்ற்றிய வைரமுத்து .. சினிமாவின் மேல் கொண்ட என் தாகம் கோபம் போன்ற இன்றைய என் நிலைக்கு ஏற்றவாறும் அப்போதே ஆதரவாக சொல்லிவிட்டார். .. அது இதோ...



*** நம் கதாசிரியர்களில் பலரும் களைத்து போகாத கற்பனை உடையவர்கள்.
அவர்களின் திசையை சினிமா திருப்பிவிடக்கூடாது சினிமாவின் திசையை அவர்கள் திருப்பிவிட வேண்டும்.

ஒரு சுத்தமான கலைஞனுக்கு பணம் புகழ் என்பவற்றுக்கெல்லாம் மேலாய் மனோதர்ம்தான் முக்கியம்.. ****


1994 வருடத்தில் இப்படி எழுதிய கவிப்பேரரசுவின் எண்ணம் 2014 வருடமான இன்றாவது நிறைவேறியிருக்கிறதா...? நானாவது என்னைபோல என் தோழர்களாவது நிறைவேற்ற இந்த சினிமா எங்களை பயன்படுத்துமா...?

--


இன்னும் பேசுவோம்

-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 6-Dec-14, 8:41 pm

மேலே