மின்னலின் சிரிப்பென, மின்மினிப் பூவென, கண்ணது கயலென, கருங்குழல்...
மின்னலின் சிரிப்பென,
மின்மினிப் பூவென,
கண்ணது கயலென,
கருங்குழல் விரியென,
பூங்குழல் மொழியென,
பொலிர்நகை அகமென,
தண்டைகள் கொஞ்சிட
தவழ்ந்திடும் முகிலென,
தண்நிழல் பொழிந்திடும்
நிறைமுக நிலவென,
என்மன தளந்தனில்
நிலவியவள் நீதானே..