எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திரு.ரஜினி காந்த் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...... காலையில்...

திரு.ரஜினி காந்த் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......
காலையில் நானும் அப்பாவும் வண்டியில் வந்து கொண்டிருந்தோம்...
இன்று அப்பாவுக்கு அலுவலகத்தில் ஏதோ முக்கியமான வேலை இருந்தது.....
எனக்கும் கல்லூரிக்கு நேரமாகி விட்டது.....
நாங்கள் வேகமாக செல்ல வேண்டி இருந்ததால் கலையில் உணவு கூட எடுத்து கொள்ளவில்லை....

இன்றைய தினம் "லிங்கா" படம் வெளியாவதால் வழி நெடுகும் பெரும் கூட்டம் அலைமோதியது...
போக்குவரத்து நெரிசலால் கல்லூரி , பள்ளி வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன...
அதிலும் கொடுமை ஆம்புலன்ஸ் வண்டிக்கு கூட யாரும் வழி விட வில்லை.....
காவல் துறையினர் நிலையோ இன்னும் பரிதாபம்....
அவர்கள் ரசிகர்களின் கூட்டதையும் சமாளித்து,
சாலைகளில் நிறுத்தி வைக்க பட்டிருந்த வண்டிகளையும் ஒழுங்கு படுத்தி,
போக்குவரத்து நெரிசலையும் சரி செய்து,
ஆம்புலன்சுக்கும் வழி செய்து கொடுத்து.....
அப்பப்பா......

உண்மையில் அங்கே பிரச்னை என்னவென்றால் திரை அரங்கிற்கு வெளியே சாலை ஓரங்களில்
வாகனங்களை அவர்கள் நிறுத்தி இருந்ததும்.....
கட் அவுட் களை பாதையை மறைக்கும் படி வைத்திருந்ததும்....
பால் அபிசேகம் என்ற பெயரிலும் இன்னும் சில அதிக பிரசங்கி தனத்திலும் பொது மக்களுக்கு
இடையூரு அளித்ததும் தான்.....

நீங்கள் அவரது தீவிர ரசிகர்கள் என காட்டி கொள்வதற்காக
செய்யும் ரகளைகளால் பிறர் எவ்வளவு தொந்தரவிற்கு
ஆளாகிறார்கள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்....

தேவையே இல்லாமல் 45 நிமிடம் நாங்கள் தாமதமாக வேண்டி இருந்தது...
நாங்கள் மட்டுமல்ல கல்லூரி, பள்ளி, அலுவலகம் செல்லும்
பலரும் தவிப்பதை பார்க்க முடிந்தது.....

தயவு செய்து இது போன்ற செயல்களை தவிர்க்குமாறு
கேட்டு கொள்கிறேன்....

நாள் : 12-Dec-14, 10:09 am

மேலே