எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அந்த பெண் ---------------- பள்ளத்தாக்கில் இழுத்து தள்ளப்பட்டாலும் மனதில்...

அந்த பெண்
----------------
பள்ளத்தாக்கில் இழுத்து தள்ளப்பட்டாலும் மனதில் இருந்து வருத்தத்தை வெளிப் படுத்தாமல் இருக்க வேண்டும். இதயம் முழுவதும் வலித்தாலும் - காயத்தை மற்றவர்களுக்கு காட்டக் கூடாது. பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் எந்தக் கவலையும் இல்லாமல் சிரித்துக் கொண்டு வாழ வேண்டும். விரும்பும் போது கூட வேண்டாம்- வலிக்கும் போதாவது கொஞ்சம் அழ விடுங்கள். அது போதும். உங்களுக்கு மனைவியானதே பெரும் பாக்கியம் என்றாள் அந்த பெண். பூமிக்கு கீழே அடைகாக்கும் கண்ணீர் வேர்கள் - நிலத்திற்கு மேலே அவளது வாழ்க்கை மரத்தின் இலைகள், பழங்கள், விதைகள் அடுத்த தலைமுறை வளர்ச்சியாக தெரிகிறது. ஆனால் உண்மை - அவளது அந்தரங்கம் வலிக்கும் போதாவது கொஞ்சம் அழவாவது விடுங்கள் என்று கெஞ்சுகிறது- இது சாத்தியமாகும் நாளும் வருமா ?

பதிவு : Kamuismail Ismail
நாள் : 14-Feb-15, 1:44 pm

மேலே