குஜராத் படுகொலை வழக்கில் 70 பேரை குற்றவாளிகள் இல்லை...
குஜராத் படுகொலை வழக்கில் 70 பேரை குற்றவாளிகள் இல்லை என நீதிமன்றம் விடுதலை செய்தது
குஜராத்தில் 3000த்துக்கும் மேற்பட்டவர்கள் தனக்கு தானே வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் செத்துப் போனார்கள்.. பெண்கள் தங்கள் கற்புகளை தானே இழந்து கொண்டார்கள்..குழந்தைகள் தாங்களே எரிபொருள் ஊற்றி தங்களை எரித்துக் கொண்டார்கள்...இப்படித்தானோ?
நீதி சொன்ன நீதிபதிகளுக்கு நீதி சொல்லும் ஓர் சம்பவம்:
மொகலாய மாமன்னர் ஜஹாங்கிர் அவையிலே இருந்தார்.
அவையில் முக்கியமான பிரச்சினை மீது விவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது.
அப்பொழுது கதறி அழுதவளாக
தன் கணவனின் பிணத்தை சுமந்து வந்து நீதி கேட்டு நின்றாள் சலவை தொழிலாளியின் மனைவி யசோதாபாய்!
மாமன்னர் ஜஹாங்கிர்: யாரம்மா நீ, என்ன நேர்ந்தது உனக்கு?
யசோதாபாய்: பேரரசே, நானும் என் கணவரும் சலவைதொழில் புரியும் கூலிகள்.
சற்று நேரத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் ஆற்றங்கரையில் வேலையில் இருந்தபோது திடீரென வந்த அம்பொன்று என் கணவனின் கழுத்தில் பாய்ந்து அவர் உயிரை குடித்து விட்டது.
தாங்கள்தான் எனக்கு நீதி வழங்கிட வேண்டும்.
ஜஹாங்கிர்: உன் சோகம் புரிகிறதம்மா,
அதற்கு நீ இங்கே வரவேண்டாமே, தாரோகா(காவல்துற
ை ஆணையர்)விடம் சென்று முறையிடு.
அவர் தீரவிசாரித்து உனக்கு நீதி வழங்குவார்.
யசோதாபாய்: மன்னிக்க வேண்டும் பேரரசே.
அந்த நடைமுறை எனக்கு தெரியும்.
ஆனால் என் கணவரின் உயிரை பறித்த அம்பு அரண்மனையில் இருந்து பாய்ந்து வந்துள்ளது,
அதில் அரசமுத்திரை உள்ளது மன்னா. நான் இங்கே வராமல் வேறெங்கு செல்வேன்?
ஜஹாங்கிர்: (கடும் கோபத்துடன்) யார் அங்கே,
அரண்மனையில் இருந்து அம்பெய்த நபரை இழத்து வாருங்கள்.
அப்போது அங்கு மயான அமைதி நிலவ மேலரங்கிலிருந்து
ஒரு குரல் கேட்கிறது.
"அது நான் செலுத்திய அம்புதான்" என்று.
ஜஹாங்கிர்: யாரது?
அந்த குரல்: நான் தான் பேரரசி நூர்ஜஹான்.
ஜஹாங்கிர்: ஓஹ் நீங்கள்தான் இதற்கு காரணமோ?
நூர்ஜஹான்: ஆம்.
ஜஹாங்கிர்: அப்படியானால் நீங்கள் குற்றவாளிகள் பகுதிக்கு வந்து கூண்டிலல்வா நிற்கவேண்டும்.?
வாருங்கள் கீழே.
அப்போது அவை முழுவதும் சலசலப்பும் பரபரப்பும் நிலவ
பேரரசி குற்றவாளி கூண்டில் நிற்கிறாள்.
ஜஹாங்கிர்: (ஆழ்ந்த யோசனைக்கு பிரகு) ஓ ஏழை குடிமகளே,
உனக்கு நேர்ந்தது ஈடுசெய்ய முடியாத ஒன்று.
இருந்தும் இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை உன்னிடமே வழங்குகிறேன்.
இதோ இந்த வில் அம்பை எடுத்துக்கொள்,
எப்படி இவள் உன்னை விதவையாக்கினாளோ,
அதேபோன்று நீயும் இவளை விதவையாக்கிடுவாயாக.
இதுவே எனது தீர்ப்பாகும்.
ஹிந்துஸ்தானை ஆண்ட மன்னன் ஒருவன் தன் குடும்பத்திற்க்காக
நீதியை புதைத்தான் என்கிற வரலாறு வேண்டாம்.
யசோதா: (அம்பெடுத்து குறி பார்க்கிறாள்,அவையே பதறுகிறது. திடீரென மனம் மாறி அழுதவளாக ஓடி சென்று மன்னனின் கால்களை பிடித்து கொண்டு) மன்னா,,,, மன்னா,,,,
தாங்கள் வாழ்க மன்னா.
தாங்களின் நீதிக்கு ஈடு எதுவுமே இல்லை மன்னா.
என்னை மன்னித்து விடுங்கள் மன்னா.
போரரசி நூர்ஜஹானை நான் மன்னிக்கிறேன் மன்னா.
மன்னனின் நீதியைகண்டு அவையே கலங்கி நிற்கிறது.
பிறகு மாமன்னன் ஜஹாங்கிர் அவர்கள் அப்பெண்ணுக்கு
300 பிகாசு நிலத்தையும்
50 கழுதைகளையும் வழங்கி
வழக்கை முடித்து நீதியை நிலைநாட்ட செய்கிறார்.
-Jahangir Naamah.
by Lawrence anderson.
page 676,