எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

” தமிழை நேசித்தேன்.. தெருவிற்கு வந்தேன். தமிழ் உணர்வாளர்களே...

” தமிழை நேசித்தேன்.. தெருவிற்கு வந்தேன். தமிழ் உணர்வாளர்களே சம்மதம் தானா. ? “ ----- இது கவிஞர் தாமரை அவர்கள் தனது கணவருக்கு எதிராக நடத்தும் போராட்டத்தின் வாசகம்.

திரு. தியாகராஜன் எனும் தியாகுக்கும் . கவிஞர் தாமரைக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட குடும்ப பிரச்சினைக்கு தமிழ் என்னங்க செஞ்சது.? இதுவரைக்கும் தாமரை அவர்களின் வாழ்வில் நடந்த தனிப்பட்ட எல்லா பிரச்சினைக்கும் தமிழ் மொழி தான் காரணமா.. ?

கவிஞர் தாமரை அவர்களே..!
தியாகு என்பவரை தமிழ் போராளி என்று நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கு தமிழ் மொழி எவ்விதத்தில் பொறுப்பு ஏற்கும். ? உங்கள் கணவர் உங்களுக்கு துரோகம் இழைத்து எங்கோ ஒடிப்போனதற்கு நிச்சயம் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால் அவர் உங்களை விட்டு ஓடி போனதற்கும் தமிழை நீங்கள் நேசித்தற்கும் என்னங்க சம்மந்தம்.? அவர் தமிழ் உணர்வாளர் என்பதால் மட்டுமே நீங்கள் தமிழை நேசித்து இருந்தால் அது உங்க தப்பு...!

எத்தனையோ திரைப்பட பாடல்களை இரட்டை அர்த்தம் இல்லாம அழகா எழுதி இருக்கீங்க.. நல்ல பேரும் புகழும் சம்பாதிச்சி.. உலகம் முழுக்க கவிஞர் எனும் அடைமொழியில் உச்சம் தொடும் உங்களுக்கு தமிழ் மொழிவை வைத்து உங்க பிரச்சினைக்கு ஆதாயம் தேடுவது சரிதானா..? தமிழ் உணர்வாளர்கள் உங்க குடும்ப பிரச்சினையில் உட்புகுந்து ஆதரவு தரட்டும்.. அதற்காக இப்படியா ஒரு மலிவான முறையில் “ தமிழை நேசித்தேன்... தெருவிற்கு வந்துவிட்டேன் “ எனும் விளம்பரம்.. ?

இதுவரை உங்களுக்கு ஏன் இன்னும் மகளிர் அமைப்பின் ஆதரவு முழுமையாக கிடைக்க வில்லை என்றால் அதற்கு காரணம் உங்கள் விளம்பர நாடகம் தான்.
நீங்கள் சொல்லும் தொனி எப்படியிருக்கு தெரியுமா ? தமிழை நேசித்தால் தெருவிற்கு வர வேண்டும் என்பதுபோல இருக்கிறது.

தவறான ஒரு நபரை கணவராக தேர்ந்தெடுத்தது உங்க தவறு !
போராளி, தமிழ் உணர்ச்சியாளர் , சமூக சேவகர், புரட்சியாளர் என்ற போர்வையிலுள்ள ஒருவர் .. உங்களை தனியே தவிக்க விட்டு காணாமல் சென்றுவிட்டார் என்றால் நீங்கள் அணுக வேண்டியது நீதிமன்றம் தான். அடைக்கலம் தேடுவது சட்டத்தைதான்...

ஆட்கொணர்வு மனு செய்தாலே போதும் .. உங்கள் கணவர் நீதிமன்றத்தில் வந்து நின்றாக வேண்டும்.. எனும் சட்டம் இருக்கிறது . இது அகில உலக அளவில் பெண்ணியம் பேசும் உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு இருக்கும் போது.. உங்கள் பிரச்சினைக்கு தமிழ் மொழி மேல் பழிப்போடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் கவிஞர் தாமரை அவர்களே..!

ஒரு பெண்ணை தவிக்க விட்டு ஓடிப்போன ஒருவரின் போராளி எனும் முகமூடியை கிழித்து எறியுங்கள் .. அவரின் போலித்தனத்தை உலகமறிய செய்யுங்கள் . அல்லது சமாதானம் செய்து அவருடன் உங்கள் விருப்படி வாழ்ந்துக்கொள்ளுங்கள். அதற்காக கொச்சையான விளம்பரத்திற்கு தமிழ் மொழியை இழுக்காதீர்கள். தயவு செய்து...!

இதுவரை நீங்கள் திரைத்துறையில் சம்பாதித்த செல்வத்திற்கு காரணமான தமிழ்மொழியா உங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தது.?
மனச்சாட்சியுடன் சிந்தித்து பாருங்கள். மனச்சாட்சியிருந்தால் உங்கள் குடும்ப பிரச்சினைக்கு தமிழ் உணர்வை கையில் எடுத்திருக்க மாட்டீர்கள்.

தமிழ் தேசிய உணர்வாளர் என்று முகமூடி அணிந்தவர்.. ஒரு பெண்ணை வஞ்சிப்பதை கடுமையாகவே கண்டனம் தெரிவிக்கும் நான்.. அதே சமயத்தில் உங்கள் மலிவான விளம்பரத்திற்கு தமிழ் மொழி உணர்வை பயன்படுத்துவதற்கும் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 6-Mar-15, 2:25 am

மேலே