அதிக பக்கங்களிருக்கும் தினத்தந்தி படிக்க ஐந்து நிமிடமாகிறது அதில்...
அதிக
பக்கங்களிருக்கும்
தினத்தந்தி
படிக்க
ஐந்து நிமிடமாகிறது
அதில்
பாதிகூட
இல்லாத
அந்த தமிழிந்து {(தி இந்து )தமிழ்}
படிக்க
அரைநாளாகிறது.....
சுசீந்திரன்.
நேர்முகம் :சினிமாகாரர் S .P .ஜனநாதன் .
அரசியலை ஆழமாக உற்று நோக்குபவர்கள் நீங்கள்.நம் நாட்டில் கார்ப்பரேட் கலாச்சாரம் வேரூன்றி வருகிறதே?
பதில்:
எங்கெல்ஸ் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ள விஷயம் இங்கே நினைவுக்கு வருகிறது.ஒரு கிராமத்தில் ஆண்டொன்றுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்கிறார்கள் .அதற்காக 5000 பேர் வேலையும் செய்கிறார்கள் நிகர லாபமாக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கிறது.இந்த நேரத்தில் அந்த கிராமத்துக்கு ஒரு வங்கி வருகிறது .அதே நிலத்தில் நெல்லுக்கு பதில் புல் விளைவிக்கலாம் என்றும் அதை ஆடுகளுக்கு உணவாகி வளர்ந்த ஆடுகளை விற்கும்போது ஆண்டுக்கு ஒன்றை கோடி லாபம் கிடைக்கும் என்றும் யோசனை கூறுகிறது வங்கி. மேலும் இந்தப் பணிக்கு 5000 பேர் தேவை இல்லை 500 பேர் உழைத்தால் போதும் என்ற யோசனையும் முன் வைக்கிறது வங்கி.
நல்ல யோசனை என்று கிராம மக்கள் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.ஆண்டின் முடிவில் வங்கி கூறியது போல் நல்ல லாபம் கிடைக்கிறது.ஆனால் அந்த கிராமத்தில் வேலை இல்லாமல் இருந்த 4500 பேரும் ஊரைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் உருவாகிறது .எங்கெல்ஸ் இங்கே ~ஆடுகள் மனிதனை துரத்திவிட்டன ''என்று முடித்திருப்பார்......எல்லாவற்றிலும் அந்நிய மூலதனம் வருவது தவறு .இது எதிர்கால சந்ததியை வேறொரு இடத்திற்குத் தள்ளிவிடும்.....
இப்படி பேட்டி போகிறது....நான் படித்ததை உங்களோடு பகிர்கிறேன்....