எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கம்பன் கவிதையைப் படித்துவிட்டு வேறு எதையாவது படிக்கச் சென்றால்...

கம்பன் கவிதையைப் படித்துவிட்டு வேறு எதையாவது படிக்கச் சென்றால் குளிர்பதன அறையிலிருந்து பக்கத்திலிருக்கும் வெக்கை அறையில் நுழைந்தது போலிருக்கும்.தமிழ் இலக்கியத்தின் ஊட்டியும் கொடைக்கானலும் கம்பன்தான் -sankaran ayya :

போகிற போக்கில் திரு .சங்கரன் அய்யா அவர்கள் கம்பனைக் குறிப்பிட்டு ஒரு இடத்தில் ஒப்புமை இட்ட வரிகள்தான் அது.....படிக்க நேர்ந்தது....வீழ்ந்து விட்டேன்...எத்துணை அளவு அவர் இதில் லயித்து ரசித்திருப்பார் ......மேனி சிலிர்த்தது.......அவருடைய கருத்தை அவருக்கே தெரியாமல் சுட்டுட்டேன்...அய்யா மன்னிக்கவும்.....

அவர் சொன்னதொன்றும் மிகை இல்லை ..கொஞ்சம் அசோக வனம் வாருங்கள்

அசோகவனத்தில் சீதையை பார்த்துவந்த தகவலை அனுமான் ராமனிடம் சொல்லும்போது ..அய்யனே நானுன் நங்கையைக் காணவில்லை....பின் யாரைக் கண்டேன்...தவம் செய்த தவமாம் தையலைக் கண்டேன்....அவள் பெண்ணல்ல...பெரும் பொறுமை....அவள் சாதாரணப் பெண்ணல்ல கற்புகெல்லாம் கற்பானவள் என்றும் அனுமன் விவரிப்பான் ...athai படிக்கும்போது கம்பன் நம்மளையும் கூடவே கூட்டிக் கொண்டே செல்வார் .....மெய்மறக்கச் செய்யும் கவித்துவம்....இதோ கம்பன் பாடுகிறான் கேட்போம்.

விற்பெருந் தடந்தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவத்த ளாய நங்கையைக் கண்டே னல்லேன்
இற்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை என்ப தொன்றும்
கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்.

வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய்
காலையும் மாலைதானும் இல்லாதோர் கனகக் கற்பச்
சோலையங் கதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாளைய: தவம் செய்த தவமாம் தையல் .

................................சங்கரனய்யா சொன்னது சரியே...கம்பனெனும் சமுத்திரத்தில் நீந்தியோரே..அவனில் கொடைக்கானலையும் ஊட்டியையும் உணரமுடியும்.......

சுசீந்திரன் .

நாள் : 5-Apr-15, 10:38 pm

மேலே