நினைவுகளே நினைவுகளே அன்பு நிறைந்த இல்லம் பிரிந்து அண்ணாமலைப்...
நினைவுகளே நினைவுகளே
அன்பு நிறைந்த இல்லம் பிரிந்து
அண்ணாமலைப் பல்கலைகழகம் வந்து
அறிவுத் தேனுடன் நாளும்
அனுபவத் தேன் பருகினீர்கள்
பதினாறு அகவையில் இங்கு
பதித்தீர்கள் பாதம்
ஒரு நான்கு ஆண்டுகளாய்
உல்லாசமாய்த் திரிந்தீர்கள்
வண்ணச் சிறகுகளால்
வானமெங்கும் அளந்தீர்கள்
வீட்டுக் கல்வி போதாதென்று
விடுதிக் கல்வி பயின்றீர்கள்
கூட்டுக் குடும்பமாய்
கல்வி பயின்ற நீவீர் இன்று
எங்கெங்கோ பறக்கின்றீர்
எந்த ஊர் எந்த திசை
எதுவும் தெரியாது என்றாலும்
செந்தமிழால் அன்பு பேசி
சீர்மையுடன் பழகினீர்கள்
செந்தமிழ் நினைவு என்
சிந்தனையில் உள்ளவரை
இப் பல்கலைக்கழகத்தை மறவேன்!!!