எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏற்பதும்,இகழ்தலும்.............உங்கள் விருப்பம் ..... ஆதி மனிதன் இயற்கையோடு இயந்த...

ஏற்பதும்,இகழ்தலும்.............உங்கள் விருப்பம் .....

ஆதி மனிதன் இயற்கையோடு இயந்த வாழ்வாய்,குகைதனை தன் அகமாக்கி ,புலிக்கும்,பாம்புக்கும் அஞ்சி இடி வருமோ?மழை வருமோ? என இதயம் படபடக்க இருட்டுக்கும் பயந்து உயிர் காப்பதே பெரும் பாடாக ,வாழ்வே போராட்டமாக இருந்ததே ஒரு காலம்.........

ஓரறிவு புல்லும்,ஈரறிவு நண்டும்,மூவறிவு வண்டும்,நான்கறிவு ஈ ,எறும்பும் ,ஐந்தறிவு ஊர்வதும் ,பறப்பதும் இன்னும் அவ்வாறே தன் இயக்கத்தில் இருக்க ,எதில் மாறுப்பட்டான்.............இந்த மனிதன் ..............

அனைத்திற்கும் இடமான இப்புவியில் ,அனைத்தையும் தன் வசமாக்கி அடக்கி ஆள்கின்றான் தானே ?அது எதனால்.........

தன் கட்டுப் பாட்டில் இந்த உலகையே கொண்டு வந்து விட்டானே ? அது எதனால்...........விஷ ஜந்துக்கு பயந்து நடுங்கியவன் ......தனக்கு அடங்கும் விலங்குகள் வீட்டில் வளர்த்தும் ........தனக்கு அடங்காதவற்றில் விலகி இருந்து காட்டு விலங்குகள் அவை என தனிமை படுத்தியும் ............இந்த விண்ணையும், மண்ணையும் ஆராய்ச்சி செய்கிறானே? .................அவன் எதில் மாறு பட்டான்...............

அது தான் மனிதனின் ஆறாவது அறிவு.............

அறிவு ஒன்று தான் ,இந்த உலகையே வெல்லும்.............

எத்தனை தான் அறிவியல் வளர்ந்தாலும்,ஆராய்ச்சிகள் பல துறைகளிலும் நடந்தாலும் இன்னும் இவனுக்கு விளங்காத வித்தை ஒன்று உள்ளது.............அது தான் உயிர்.............

வித விதமாக சமைத்து உண்கிறோம்.........
உலகின் ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லைக்கு சில மணி நேரங்களில் செல்கிறோம்.
தொலை தொடர்புகள் ,அடுத்த வினாடியே சென்று அடைகின்றன......
அணு ஆராய்ச்சியும்.கோள்கள் பற்றியும் ஆய்வு செய்கிறோம்.....
உயிர் கொள்ளும் நோய்களுக்கு எதிர் மருந்துகள் காணும் ஆய்வுகளும் உலகம் முழுவதும் நடக்கிறது.................


ஆயினும்,
இன்னும் விளங்காத மர்மம்...............இந்த உயிர் சென்று அடையும் இடம்................

உயிர் பயம்.............உலக அனுமான்ஷியம்............இது தான் கடவுளை மனிதன் நாட காரணம்.............

ஏன்,எதற்கு,எப்படி என்ற ஆய்வினை எதன் மீதும் செய்யலாம்.........................மதங்கள் ,அதன் அடிப்படை கோட்பாடுகள்........இதற்கு எதிரானவை...............என்னை [மதத்தை]கேள்வியே கேட்க கூடாது..........அப்படியே நம்பு .......என்று சொல்கின்றன........அதன் அடிப்படைகள் மீது உள்ள ஒரு சார்பு நிலைப்பாடு கேள்விகள் கேட்கேவே தோன்றுமாறு உள்ளன............


அறிவியலும் ,ஆன்மீகமும் ஒன்றுக் கொன்று நேர் எதிரானவை..............அறிவியலின் கேள்விக்கு ஆன்மீகத்திடம் விடை இல்லை...........அறிவியலுக்கு முற்றும் வேறு பட்டது ஆன்மிகம்..............

இது தான்
விஞ்ஞானம் * மெய்ஞானம்

1.ஐரோப்பாவின் அறிவு வளர்ச்சி குன்றிய காலம்.............அது திருச்சபை எழுச்சி காலம்
2.உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவின் நிலை..........என்னென்றால் இந்த கருத்து பைபிளுக்கு எதிரானதாக கருதப் பட்டது........

இது ஒரு எடுத்துக் காட்டு தான்......


மதங்கள் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்பதே இல்லை .....
அறிவியல் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருப்பது...........இன்று உறுதி செய்யப் பட்ட ஒரு தியரி
நாளைக்கு தப்பு என்று ஒன்னொரு ஆய்வாளர் நிருபிக்கலாம்.........ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்........புதிய ,புதிய தத்துவங்களும்,கண்டுபிடிப்புகளும்,மருந்துகளும் இந்த ஆய்வுகளாலே பெறப் பட்டன............அறிவியல் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும்.............

பழமையில் இருந்து மாறவே மாட்டேன் என்றால்


மின்சாரம் கிடையாது.....
விமானம் கிடையாது......
செல்போன் ,இன்டர்நெட் எதுவும் கிடையாது..........
ஏன்,பிரியாணி கூட கிடைத்திருக்காது.............

பழமை வாதிகளின் பயம்.............

இந்த அறிவு தான் குழுக்களாக இருந்த மனிதனை குடும்பம் என்ற கட்டமைப்பிற்கு கொண்டு வந்தது............இந்த அறிவு குடும்பம் எனும் அமைப்பை தனி மனிதனாக மாற்றி விடும் என்றால்...............கடி வாளம் இல்லா ,இந்த குதிரைக்கு[அறிவிற்கு] போகும் பாதை தெரியும்............நல்லதும்,கெட்டதும் பகுத்து அறியவும் தெரியும்............





பதிவு : gowthami
நாள் : 22-Apr-15, 10:43 am

மேலே