எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முடிந்தவரை தளத்தில் கருத்து மோதலில் ஈடுப்படக்கூடாது என்றே இருக்கிறேன்....

முடிந்தவரை தளத்தில் கருத்து மோதலில் ஈடுப்படக்கூடாது என்றே இருக்கிறேன்.

எழுத்துபிழைகள் சுட்டிக்காட்டி சொல்வது விமர்சனம் ஆகாது. சரிதானே.

சரி விமர்சனம் செய்வோர் கீழ்கண்ட எனது கருத்தையும் ஆமோதிப்பார்களா என தெரிய வில்லை.

அதாகப்பட்டது,

வசன நடை என்றதொரு கவிநடையும் இருக்கிறது. கவிதையின் பரிணாமம் புதுக்கவிதை என்பதையும் தாண்டி வேறு களத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது. கருத்துச்செறிவிலும் . சொல்லும் நயத்திலும் படைப்பு வாசிக்கும் வாசகரின் சிந்தனை கிளர்ச்சியுற்று ஒரு கண நொடியில் நிமிரும் பரவசம் ..
(ஆனந்த விகடன் இதழில் வெளியாகும் கவிதைகள் இவ்வகையிலிருக்கும் )

இதுதான் இன்றைய நவீன வடிவக் கவிதையாக பார்க்கப்படுகிறது. . விமர்சனம் செய்வதற்கு முன் இலக்கிய ஆய்வொன்றையும் பார்த்திருக்க வேண்டும். இல்லையேல், விமர்சித்த கவிதையின் உட்பொருளை எடுத்து விமர்சிப்பவரே எழுதி காட்டினால் சால சிறந்தது.
அதைவிடுத்து, கவிதைக்கும் கதைக்கும் கருத்திட்டவர்களை தாக்கி எழுதுவது ஒரு சிறந்த விமர்சனவாதியின் நற்செயல் அல்ல.

முதலில்

கவிதை என்றால் என்ன ?

இதுவரையிலும் உறுதியான பதில் எந்த அறிஞர் கொம்பனாலும் சொல்லமுடியாத விளக்கம்.

ரசனையைத் தருவது எதுவோ அது கவிதை என்று என் பார்வையில் கவிதைக்கு அர்த்தம் பொருத்திக்கொள்கிறேன்,

உங்கள் பார்வையில் வேறு கோட்பாடுகளும் அர்த்தங்களும் இருக்கும். அல்லவா. ?

விமர்சன கரங்கள் படைப்பின் தோளில் கைப்போட மட்டுமே அனுமதி உண்டு. படைப்பாளியின் மூக்கில் உள் நுழைக்க அல்ல.


நன்றி

- வியன்

பதிவு : வியன்
நாள் : 21-May-15, 7:24 pm

மேலே