மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், மாணவர்களின் வீடுகளுக்குச்...
மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அந்தப் புத்தகங்களைத் திரும்பப் பெற்று வருகிறார்களாம். கடந்த மூன்றாண்டுகளாக இந்தப் புத்தகங்கள்தான் விநியோகிக்கப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணிந்துரையில் எங்கள் பெயர் இருப்பது, சில ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் தெரிந்ததாம்! எப்படிப்பட்ட ஆட்சி தமிழகத் திலே நடைபெறுகிறது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்! தி.மு. கழக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக, புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தையே மருத்துவமனையாக மாற்றியவர்கள் அல்லவா? சமச்சீர் கல்வித் திட்டத்திற்கே மூடு விழா நடத்த முயன்றவர்கள் அல்லவா? நீதிமன்றம் கூறிய பிறகும், மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியவர்கள் அல்லவா? பாட நூல் விவகாரத்திற்கு தி.மு.க தலைவர் கலைஞரின் பதில்