நான் என் கவிதைகளின் மூலம் மெட்டா ·பிஸிக்சை உருவகப்படுத்துகிறேன்...
நான் என் கவிதைகளின் மூலம் மெட்டா ·பிஸிக்சை உருவகப்படுத்துகிறேன் . நான் புதுமையான எல்லா எண்ணங்களுடனும் எனது சிந்தனைகளுக்குத் தெளிவு கிடைப்பதற்காகப் போராடுகிறேன் . இந்த மல்யுத்தம் தான் எனக்கு காவிய ரசனையையும் அளித்தது .நான் ஒரு புதுமை கவிஞராக ஆவதற்கோ ,சர்ரியலிஸ்டிக் கவிஞராவதற்கோ கவிதை எழுதவில்லை . நான் என்னையே தேடிச் செல்கிறேன் . இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது - பிரமிள்