எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருவேலங்காடு வானப்பிறையில் முகம் பார்த்து தலைவாரும் என்னை நீங்கள்...

கருவேலங்காடு

வானப்பிறையில் முகம் பார்த்து
தலைவாரும் என்னை
நீங்கள் வானம்பாடி என்று
சொல்லிவிட்டுப் போங்கள்.
கவலை இல்லை .
இப்போது நான்
எருக்கு கருவேலம் காட்டுக்குள்
காலாற நடக்கிறேன்
தொலைந்து போன
என் நண்பனைத் தேடி
அவன் எனக்கு அறிமுகமான போது
இந்நாட்டின் முதலமைச்சராக
ஒரு படிக்காத மேதை இருந்தார்.

சுசீந்திரன்.

நாள் : 23-Aug-15, 12:52 pm

மேலே