மலைக்கோட்டையில் நாளை கிழிந்த ரூபாய்களை மாற்றும் முகாம் திருச்சி...
மலைக்கோட்டையில் நாளை கிழிந்த ரூபாய்களை மாற்றும் முகாம்
திருச்சி மண்டல இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியன் வங்கி, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளும் சிறப்பு முகாமை இந்தியன் வங்கி மலைக்கோட்டை கிளையில் நடத்துகிறது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் தங்களிடம் உள்ள கிழிந்த, சேதம் அடைந்த ரூபாய் நோட்டுகளை இந்த முகாமில் மாற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.