கவிதைகள் உணர்வு: உள்ளம் தீட்டும் உன்னத ஓவியம். கவிதை:...
கவிதைகள்
உணர்வு:
உள்ளம் தீட்டும்
உன்னத ஓவியம்.
கவிதை:
கவிஞனின்
ஆழ்மனம் பேசும் அழகிய வினோதம்.
வெற்றி:
ஏட்டாக்கனியை
எட்டிபிடிக்கும் ஏணியவன்.
சின்னத்தாய்:
கல்லென நிற்கும்
கடவுளே
கண்திறக்க மாட்டீரா
கன்னியவள் கற்பிளக்கிறாள்
கருவை சுமக்கிறாள்
கண்ணாடியாய் உடைகிறாள்
என்னவரே உன் இதயத்தில் இரக்கம் காட்டமாட்டீரா
உரியவன் இன்றி
உடுக்க உடை இன்றி
உணவு இன்றி
அகதியாய் அவதாரமல்லவோ எடுக்கிறாள்
சின்னதாய் கலக்கம் கொண்டால்
சின்னத்தாய் அவள் ஏங்கி நின்றாள்
உலகமே உடையக்கண்டு
உருகுளைந்து நிற்கிறாள்
வகுந்த வகுட்டிலே பொட்டில்லை
பாவியவள் பலாத்காரமாய் வஞ்சிக்கப்பட்டவள்
படைத்தவன் பாடிய பாட்டால்
பாரத தாயென்னும் பத்தினியின்
பெண்குழந்தை ஈன்றால் பச்சிளம் சிசுவை
பத்துபேர் கூட மறைக்க இல்லா வீதியில்
உதிரத்தை உள்ளடக்கி உருவாக்கிய குழந்தையை
ஏந்திநிற்கிறாள்
கண்கள் பனிக்க இதயம் கனக்க
உதிராத ஏக்கத்தோடு மார்பு காம்பு வழியே
சுரக்காத பாலினை
எதிர்பார்து..................................