எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர் பொள்ளாச்சி திரு. அபி அவர்களுக்கு வாழ்த்து. எழுத்தாளர்கள்...


தோழர் பொள்ளாச்சி திரு. அபி அவர்களுக்கு வாழ்த்து.

எழுத்தாளர்கள்  
சமூகத்தின் கண்ணாடி மட்டுமல்ல 
சமுதாயத்தின் வழிகாட்டிகள்.
சாதி, மத, இன வேற்றுமையற்ற
புது சமுதாயத்தை உருவாக்க
தன் சிந்தனைகளை விதைப்பவர்கள்.

சில எழுத்துகள் கவிதையானால்
சில எழுத்துகள் கதையானால்
இந்த உலகை அழகுப்படுத்தும்
இந்த மானுடத்தை அர்த்தப்படுத்தும்.

எழுத்தாளர் விதையானால் 
சமுதாய நந்தவனத்தில்
மறுமலர்ச்சி நறுமணம்வீசும். 

எழுத்துக்கள் விதைக்கப்பட்டால்
சமுதாயத் தோட்டத்தில்
புதுபுரட்சிப் பூக்கள் பூக்கும் 
தேவையெனில் புரட்சி வெடிக்கும். 

எழுதுபவர் அதன்படி 
வாழ்பவர்களில் ஒருசிலரே.
அவ்வாறு
ஒரு பாரதியை கண்டோம்
அவ்வாறே இத்தளத்தில்
தோழர் அபியை காணுகிறோம். 

ஆதலால் காதலித்தேன் 
என்றவரின் வாழ்வில் 
எங்கெங்கும் காதலே காதலே.
காதல், உடலைச் சார்ந்ததல்ல
உயிரைச் சார்ந்ததல்ல
இந்த சமூகத்தையும் சார்ந்தது
உணர்த்தியிருக்கிறார் ஒரு நாவலில்
உணர்ந்திருந்தேன் படித்த ஆவலில்..!

காதலித்திருக்கிறார்.
கம்யூனிசத்தை..
விளிம்பு நிலை 
மனிதர்களை 
சமூக நல்லிணக்கங்களை 
அன்னைத் தமிழை.
கூடவே காதலையும்.
காதலை காதலாக காதலித்து
கெளரவப்படுத்திக் கொண்டிருக்கும்
தோழர் அபி அவர்களுக்கு
இன்று பிறந்தநாள்.
வாழ்த்துக்கிறேன்
வாழ்த்துவோம்.

வாழ்க..! பல்லாண்டு..!
தோழர் அபி அவர்களே!
வாழ்க பல்லாண்டு..! 
தமிழ்போல.. தமிழின் இனிமைப்போல...!

உங்கள் எழுத்தும் அன்பும்
என்றென்றும் தேவை
இந்த சமூகத்திற்கும்
இந்த இலக்கியத்திற்கும்
இந்த மொழிக்கும்
எனக்கும்.. !


-அன்பன்/சிஷ்யன்/ரசிகன்
இரா.சந்தோஷ் குமார். 

நாள் : 18-Feb-16, 12:15 pm

மேலே