8-ம் வகுப்பு படிக்கும் இந்திய வம்சாவளி சிறுவன் அமெரிக்காவில்...
8-ம் வகுப்பு படிக்கும் இந்திய வம்சாவளி சிறுவன் அமெரிக்காவில் கவுரவிப்பு·
இஷான் படேல்அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலம், ஹார்ட்போர்டு நகரைச் சேர்ந்த 13 வயது இந்திய வம்சாவளி சிறுவன் இஷான் படேல் தொண்டுப் பணிக்காக கவுரவிக்கப்பட் டுள்ளார்.மேற்கு ஹார்ட்போர்ட் நகரில் உள்ள கிங்ஸ்உட்-ஆக் ஸ்போர்டு பள்ளியில் இம்மாண வர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ‘பிளான்டிங் பென்சில்ஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஏற் படுத்தி உலகம் முழுவதும் ஏழை மற்றும் ஆதரவற்ற சிறுவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். போதிய நிதிவசதி யற்ற பள்ளிகளுக்கு நிதியுதவி மற்றும் உபகரணங்கள் அளிக்கும் பணியில் இவரது அமைப்பு ஈடுபட்டுள்ளது.இந்நிலையில் ஹார்ட் போர்டு நகரில் அண்மையில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் மிலன் கலாச் சார அமைப்பு சார்பில் இஷான் கவுரவிக்கப்பட்டார். இஷா னின் தாய் ஆல்பா படேல் குழந்தை நல மருத்துவராக உள்ளார். “எனது தாய் கொடுத்து உதவும் மனப் பான்மையுடன் என்னை வளர்த் தார்” என்கிறார் இஷான்.அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை மிலன் கலாச் சார அமைப்பு உறுப்பினர் களாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் மற்றும் வளர்க் கும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.