தி.மு.க வின் ஊழலும் ,அ.தி.மு.க வின் ஊழலும் ஒன்றுக்கொன்று...
தி.மு.க வின் ஊழலும் ,அ.தி.மு.க வின் ஊழலும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல...தி.மு.க மத்திய அரசின்வாயிலக சுட்ட பணத்தை வைத்து தமிழகத்தில் பண புழக்கத்தை அதிகரித்தது நில அபகரிப்பை செவ்வனே செய்து முடித்தது ,,,,அ.தி.மு.க டாஸ்மாக்கில் சுட்ட பணத்தை வைத்து உப்புமுதல் சிமெண்ட் வரை அம்மா முகம் பதித்து உளம் மகிழ்ந்தது.மதிய அரசு அளித்த மிச்ச சொச்சத்தையும் வாயில் போட்டுக்கொண்டார்கள் அ.தி.மு.க அமைச்சர்கள்.அகவே இருவரும் நமக்கு வழங்கியது சொம்பைதான்.5 வருடம் அடிவாங்கி அடிவாங்கி ஒடுங்கிய சொம்பை இந்த தேர்தல் முடிவு புதுப்பித்து கொடுக்கிறது.1000 கோடி 5000 கோடி என்கிறார்களே ,அதெல்லாம் ஒரு திட்டமாக மாறியிருந்தால் தமிழ் நாடு என்றோ அனைத்து துறைகளிலும் வளர்த்திருக்கும்.புதிதாக பொறுபேற்கும் அரசுக்கு 1000 யோசனைகள் இருக்கும், விட்ட பண்ணதை பிடிக்க என்று...,உங்கள் ஒன்பதாம் தலைமுறை வரை சுக வாழ்க்கை வாழ சொத்துக்களை சேகரித்து விட்டீர்கள் ,எங்கள் அடுத்த தலைமுறை வாழ கொஞ்சம் நல்ல திட்டங்களை கொடுங்கள். எங்களை ஒரு செல் போனுக்கும் வக்கற்றவர்கள் என நினைக்காமல் ஒரு சாமானியனின் வாழ்க்கை தரம் உயர உங்கள் சொத்தை எங்களுக்கு எழுதி வைக்காமல் ,எங்கள் சொத்தை மட்டும் எங்களுக்கு கொடுத்தால் நீங்கள் வணங்கும் தெய்வம் ,நீங்கள் இறந்த பின் அதன் அருகிலேய அமர ஒரு துண்டை போட்டு வைக்கும்