அன்று நம் அன்னை அன்பை கொட்டி வளர்க்காமல் இருந்திருந்தால்...
அன்று
நம் அன்னை
அன்பை
கொட்டி வளர்க்காமல் இருந்திருந்தால்
அன்புள்ள மனிதனாக இருந்திருக்க மாட்டாய்.,
தவறுக்கு
கண்டிப்புடன் வளர்க்காமல் இருந்திருந்தால்
வலி என்பதை
அறிந்திருக்க மாட்டாய்.,
உண்ணும் உணவில்
ஒவ்வொரு பருக்கையிலும்
பாசம் காட்டியதாலே,
பண்புடன் வளர்ந்தாய்.,
சிசுவை பெற்றெடுத்த
தாய்க்கு மட்டுமே தெரியும்,
தன் பிள்ளையை பிரிந்து வாழும் வலி...
தானுயர செங்கோல் விதைத்த
தாய்மையை
இங்ஙனம் நினைவு கூறவே
எழுந்தன இவ்வரிகள்...!!! �