ரூ.8 லட்சம் அபேஸ்: கரகாட்டக்காரன் பட பாணியில் பதில்...
ரூ.8 லட்சம் அபேஸ்: கரகாட்டக்காரன் பட பாணியில் பதில் அளித்த எஸ்.ஐ.க்கள்
சேலம், மார்ச். 25–
மர வியாபாரி குப்புசாமியின் பணமான 8¼ லட்சம் அபேஸ் செய்தது தொடர்பாக வீராணம் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும், தேர்தல் பறக்கும் படை பிரிவில் இடம் பெற்ற, போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்களான கோவிந்தன், மணிவண்ணன் ஆகியோரிடம் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் விடிய–விடிய விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் பறிமுதல் செய்த ரூ.35 லட்சத்தில் ரூ. 8¼ லட்சம் எங்கே? என்று அந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ரூ.4 லட்சம் தான் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து எஸ்.பி., மீதமுள்ள ரூ.4¼லட்சம் எங்கே? என்று கேட்டதற்கு அவர்கள் ‘அந்த பணம் தான் இந்த பணம்’ என்று கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி–செந்தில் கூறுவதுபோல் நகைச் சுவையாக பதில் அளித்துள்ளனர்.