தனிமை ------------------- தனிமையின் இருட்டு தசைக்குள்ளும் புகுந்துக்கொண்டு தன்னந்தனியாய்...
தனிமை
-------------------
தனிமையின் இருட்டு
தசைக்குள்ளும் புகுந்துக்கொண்டு
தன்னந்தனியாய் செலுத்திக்கொண்டிருந்தது
காரணம் என்னவாயின்
காரியம் மட்டும் புலப்படவில்லை
இருட்டுக்குள்
வீழ்ந்து கிடந்த
இரத்தமும் சதையும்
கலந்த ஒரு
பூத உடல் பூதாகரமாய்
செயல்பட்ட தினம் இன்று ..!
தசைகள் கம்பியால்
ஏதோ ஒரு உலோகத்தால்
கிழிக்கப்பட்ட நிலையிலும்
சொட்டு சொட்டாய்
வடிகிற நேரங்களிலும்
தனிமை வாட்டிக்கொண்டிருந்தது
ஆளில்லாத ஒரு இருட்டு
அறையின் கூரைகள்
கருப்பு கலவை வாசமும்
இரத்த வாடையின்
கவுச்சியுமே கொன்றுவிடும்
போல என்னை ...!
#கார்த்திக்