மார்ச்-08 கருவிலெனை உருவாக்கி கருணையால் தெளிவாக்கி அறிவினில் நான்...
மார்ச்-08
கருவிலெனை உருவாக்கி
கருணையால் தெளிவாக்கி
அறிவினில் நான் உயர்ந்திட
அன்றாடம் பயிற்சி தந்த
அன்னையே..!
என் தேவை
எதுவெனவறிந்து
உடனே நிறைவேற்றிடும்
மூத்த சகோதரியே...
சண்டையிடும்
போதெல்லாம்
சமரசமாய் சென்றிடும்
தங்கையே.!
தோற்றுப்போகும்
வேளையிலெல்லாம்
தோழோடு தோழ்நின்று
நம்பிக்கையூட்டிய
தோழியே..!
என்னோடு
இறுதிவரை
வாழ்வேனென
உறுதி தந்த
காதலியே..!
என்னை நம்பி
எனக்காக
எனைக்காக்க வந்த
மனைவியே..!
என்னினிய உறவாய்
என்னினிய மகிழ்வாய்
என்னையும் மழலையாய்
மாற்றிட மலர்ந்திட்ட
மகளே..!
இன்னன்னாளில்
இந்நாட்டில்
உங்களனைவரின்
பாதுகாப்பையும்
சுதந்திரமான
வாழ்வையும்
உறுதி செய்வது
ஆண்களாகிய எம்
ஒவ்வொருவரின் கடமை
என உறுதியேற்கிறோம்...
வாழ்க பெண்ணினம்..!
வளர்க உமது தாய்மைகுணம்...!
உங்களனைவரையும்
வாழ்த்தி
வணங்குகின்றேன்
மகளிர் தின
வாழ்த்துக்களுடன் ...
என்றும் நட்புடன்
அன்பு...