எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

'ஏன்டா அழறே? ' "பாசமலர் பார்த்தேன்? கண்ணீர் தானாக...

'ஏன்டா அழறே? '

"பாசமலர் பார்த்தேன்?
கண்ணீர் தானாக
வந்துவிட்டது!
ஆரூர்தாஸின்
தமிழும்
சிவாஜி சாவித்திரியின்
நடிப்பும் எவனையும்
உருக்கிவிடும்!
ஆரூர்தாஸ் ஓர் யோகி!
20 வயதிலேயே
தேவர் மூலம்
அறிமுகமாகி
அடக்கமாக உயர்ந்து
சாவித்திரி பீம்சிங், ஜெமினி மூலம்சிவாஜியைசந்திக்கிறார் 1959ல்!

சிவாஜி ஜெமினியை
பார்த்து
'என்னடா
சின்னப்பையனை கூட்டிண்டு வந்து
கதாசிரியர்ங்கறே? '
என்றார்!
உணர்ச்சிவசப்பட்ட
ஆரூர்தாஸ்

"மடல் பெரிது தாழைமகிழ் இனிது கந்தம்

உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்! "
என்றார்!
திகைத்துப்போன
சிவாஜி
' பாசமலருக்கு '
கதாசிரியராக்குகிறார்!
அப்பறமென்ன? 
சிவாஜி பீம்சிங் ஆரூர்தாஸ்
கொடிகட்டி பறந்த
நாட்களை
மறக்க முடியாத
நாட்கள்!
MGR க்கும்
பல கதைகள்
எழுதி, ஒரு vice ம் இல்லாததால்

'சந்யாசி'என்றபட்டத்தையும்பெற்றார்! 

ஓர் அற்புதமான
இந்த ஜேசுதாஸ்
திருவாரூரை
அடை மொழியாகக்கொண்ட ஆரூர்தாஸ்?
புரிஞ்சதோடா பித்துக்குளி?"

 

பதிவு : ராஜா ஐயர்
நாள் : 6-Jun-17, 12:07 pm

மேலே