எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கனவு கவிதையாய் என் காதலை சொல்ல கண்கள் பார்த்த...

                             கனவு

கவிதையாய் என் காதலை சொல்ல 
கண்கள் பார்த்த கணம் 
காணாமலே போனேன் தினம்

பேச வார்த்தை இல்லை
போக வாய்ப்பு இல்லை

மாலை முதலே விடிகிறதே
மனது முழுதும் பரக்கிறதே
கட்சி யாவும் பிழைகிறதே
கடந்து போக மறுக்கிறதே 

காதல் சொல்ல துடிக்கிறதே
கண்களில் காதல் கரைகிறதே

தேடியே அறிந்தேன் உன்னை
தெரிந்தும் இழந்தேன் என்னை

கண்ணாலே என்னை அள்ளினாயே
கள்வனே காதல் சொல்ல தள்ளினாயே

கணக்கும் நொடியை கடக்க உன்
கண்ணில் என்னை தேடினேன்
கடந்த நொடி காட்டியது
உன் கைகள் என்னை கட்டியது

பேச வார்த்தை இல்லை 
போக வாய்ப்பு இல்லை

கலங்கிய விழி கன்னங்கள் நனைக்க
கண்ணீருடன் விழித்த கண்கள் 
மீண்டும் சொல்லியது கணவா
இன்றும் இது காலை கனவா !!!



பதிவு : மஹிமாபாலன்
நாள் : 7-Jul-17, 4:33 pm

மேலே