மான் கராத்தே - திரை விமர்சனம் அந்த காட்டுக்குள்...
மான் கராத்தே - திரை விமர்சனம்
அந்த காட்டுக்குள் சதீஸ் மற்றும் அவரது நான்கு நண்பர்களும் பிக்னிக் போகிறார்கள்.
அந்த காட்டுக்குள் சதீஸ் மற்றும் அவரது நான்கு நண்பர்களும் பிக்னிக் போகிறார்கள்.
வழியில் அவங்க ஒரு சித்தரை சந்திப்பதோடு மட்டுமல்லாமல் சித்தரை நக்கலடித்து விட்டு ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் வரக்கூடிய தினத்தந்தி பேப்பரை உங்களால் வரவழைத்து தரமுடியுமா என சவால் விடுகிறார்கள். உடனே சித்தர் தினத்தந்தி நாளிதழை வரவழைத்து தருகிறார்.
அந்த நாளிதழில் பீட்டர்(அட நம்ப சிவகார்த்திகேயன் தாங்க) என்கிற பாக்சறால சதிஸ் அன்கோவுக்கு ரூ 2 கோடி கிடைக்கபோவதாக செய்தி வெளியாகியுள்ளது.
அடுத்தது என்ன சதீஸ் அன்கோ பீட்டரை தேடுறது தான்.
அப்போதுதான் அறிமுகமாகிறார் நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன். ஓபனிங் சாங் ம்ம்ம்ம்ம்ம்ம்...... தூக்கலா இருக்கு......
சாங் முடிஞ்சதும் தான் தெரியுது நம்ம ஹீரோவுக்கு பாக்சிங்கே தெரியாதுன்னு....
இதை தெரிஞ்சதும் சதிஸ் அன்கோ சாக் ஆகிறார்கள், அதுக்கு அப்புறம் என்ன பாக்ஸிங் போட்டியில் கலந்துகொள்ள சிவகார்த்திகேயனுக்கு ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.
ஆனால் சிவகார்த்திகேயனோ... என் லவ்வுக்கு ஐடியா கொடு, வீட்டுக்கு பொருள் வாங்கி குடு என சதிஸ் அன்கோவை பாடாய் படுத்துகிறார்.
இறுதியில் பாக்சிங் போட்டியில் சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா, இரண்டு கோடியை சதீஸ் அன்கோ பெற்றார்களா என்பதே படத்தின் மீதி கதை...
இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் ஃபர்பாமன்ஸ் பார்க்கும் போது மற்ற படங்களை விட நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நடனத்தில் மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார்.
ஹசிகாவை பற்றி உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.... அதிலும் மாஞ்சா பொண்ணு பாடலில் நடனம் சூப்பரோ சூப்பர்..
சதீஸ்க்கோ படம் முழுவதும் நக்கலான டயலாக்குகள் தான். சிவகார்த்திகேயனுடன் அவர் சேர்ந்து செய்யும் டைமிங் காமெடிகள் தியேட்டரையே அதிர வைக்கிறது. (ஐ திங் சந்தானத்துக்கு போட்டி அதிகரித்து கொண்டே இருக்கிறது)
பாக்சிங் போட்டியில் ரெப்ரியாக வரும் சூரியை, பாக்சிங் தெரியாத சிவகார்த்திகேயன் அலற விடுவது செம காமெடி....
வில்லனாக வரும் வம்சி கிருஷ்ணா நடிப்பில் நன்றாகவே அசத்தி இருக்கிறார்...
அனிருத் இசையில் மூன்று பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது.
மொத்தத்தில் மான் கராத்தே........ நல்ல பொழுது போக்கு படம் தான்..