எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட 'மங்கல்யான்' பாதி தூரத்தை கடந்ததுவிட்டது. பெங்களூர்:...

செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட 'மங்கல்யான்' பாதி தூரத்தை கடந்ததுவிட்டது.

பெங்களூர்: இந்தியாவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையின் பாதி தூரத்தை இன்று காலை சரியாக 9.50க்கு கடந்தது. மங்கல்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவின் சத்தீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் ஏவப்பட்டது. தற்போது அது 337.5 மில்லியன் கிலோமீட்டர்களை கடந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மங்கல்யான் விண்கலம் வரும் செப்டம்பர் 24, 2014, அன்று செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மங்கல்யானின் நோக்கம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ ஏற்ற சாத்தியக்கூறு உள்ளதா என்று சோதித்து அனுப்பும். சீனாவின் செவ்வாய் கிரக பயணத்தை விட மங்கல்யான் முற்றிலும் சிறந்ததாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இது 15 மாதங்களில் 500 விஞ்ஞானிகளால் மங்கல்யான் உருவாக்கப்பட்டது. மேலும் இதுவரை அனுப்பப்ட்ட 51 செயற்கைக்கோள்களில் 27 செயற்கைக்கோள்கள் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரையில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் யுரேப்ப விண்வெளி மையங்கள் மட்டுமே வெற்றிகரமாக செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.

நாள் : 9-Apr-14, 6:04 pm

மேலே