அலாவுதீனும் அற்புத விளக்கும் வணக்கம் நண்பர்களே, நான் இப்பொழுது...
அலாவுதீனும் அற்புத விளக்கும்
வணக்கம் நண்பர்களே,
நான் இப்பொழுது அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை பற்றி எழுதப் போகிறேன்.
அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஏன் என்றால் அதில் பூதம் எல்லாவற்றுக்கும் உதவி செய்யும். அது போல மனிதனும் உதவி செய்யவேண்டும். மந்திரவாதிதான் அலாவுதீன் சித்தப்பா என்று ஏமாற்றி, குடும்பத்துடன் பழகி ஒரு நாள் அவனை ஏமாற்றி ஒரு குகைக்குள் அழைத்துச் சென்றான். அலாவுதீன் விளக்கை எடுத்து வந்த உடன் பிறகு மந்திரவாதி ஏமாற்றி விட்டான். மந்திரவாதி அலாவுதீனின் மனைவியை கடத்தி வந்து ஆப்ரிக்காவில் அடைத்து வைத்துவிட்டான். பிறகு பூதத்தின் உதவி உடன் ஆப்ரிக்காவிற்கு வந்து ஒரு திட்டம்போட்டு மந்திர வாதியை கொலை செய்து விட்டு தப்பித்துவிட்டான். இறுதியில் அலாவுதீனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.