எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதனுடைய மிகப் பெரிய குறை, தன்னில் நிறை பெறாமை...

மனிதனுடைய மிகப் பெரிய குறை, தன்னில் நிறை பெறாமை தான்...
பிறந்த போதே அழுகையோடு, பிறந்தவன் வாழும் போது எது, எதுக்காகவோ ஓயாத அழுகை....
காரணம் என்ன? 
பேராசை தான்...

யாரோ ஒருத்தர் அழகான ஆடை அணிந்து இருந்தால் 
அதே போல் தானும் அணிய வேண்டும் என்ற ஆசை...

பக்கத்து வீட்டு பெண் தங்க நகை அணிந்தால் தனக்கும் அதே போல்
நகை வெண்டும் என்று கணவனைத் தொல்லை செய்யும் மனைவிமார்களே அதிகம்....

உயர் கல்வி, ஆடம்பரமான பள்ளி, கல்லூரி என்று பிள்ளைகளைப் படிக்க வைக்க
அதிக லாபம், லஞ்சம், ஊழல் என்று பெருகிக் கொண்டே செல்கிறது...

இதில் வேதனை என்னவென்றால் அந்த ஆடம்பரத்தில் பெருமை கொள்வது தான்... 

நாள் : 30-Jan-18, 5:30 pm

மேலே