கீழடி தொன்மை
−−−−−−−−−−−−−−−−
பண்டையர் குலமாகப் பாரினில் தோன்றி//
பண்புள்ள குலமாகப் பாரினை உயர்த்தி//
எங்கெங்கும் எச்சத்தை மிச்சமாகத் தூவி//
எதிரிகள் இல்லாத நல்வழி புகுத்தி//
உலகின் முதலாய் மூலத்தின் வடிவாய்//
வாழ்ந்த குலமே எங்கள் குலம்//
எண்ணாயிர ஆண்டுக்கு முன்னேக் கல்வியிலுயர்ந்து//
சங்கங்கள் வைத்து தமிழைப் போற்றியகுடி//
செம்பினில் கலங்களைச் செய்து வாழ்ந்தகுடி//
பெண்ணுக்கு சரிநிகர் பகன்றப்பண் ணேற்றுக்குடி//
மட்கலத்துள் மக்காத்தன்மை அறிந்த மங்களக்குடி//
இறைவனால் ஆண்டு, இறைவனைச் சமைத்தகுடி//
நாகரீகத்தின் உண்மை எதுவெனச் சொன்னகுடி//
வைத்திய, தத்துவ, அறிவியலை அறிந்தகுடி//
சாட்சியாய் உலகுதரும் தொல்லியல் ஆய்வின்வழி//
கீழடிபோல் உலகம் முழுதும் வாழ்ந்தகுடி......
−−− ப.வீரக்குமார், திருச்சுழி.
எண்ணம்
(Eluthu Ennam)
பெதும்மையின் போராட்டம்யாக்கையை துய்க்க நினைக்கும் பிணம் திண்ணி கழுகுகள்... (கௌசல்யா சேகர்)
08-Jun-2022 1:03 am
பெதும்மையின் போராட்டம்
- கௌசல்யா சேகர்
உண்மை
உயிர்ப்பிணம் யாக்கை இவளது
கொத்தும்
சமூக கழுகினங் கள்
சமூக அவலத்தை சுருக்கமாகச்
சொல்லியிருக்கிறீர்கள்
பெதும்பை இலக்கியச் சொல்
அழகு தருகிறது
பழைய இலக்கியங்கள்
படித்திருக்கிறீர்கள்
09-Jun-2022 3:05 pm
பேதை , பெதும்பை , அரிவை, தெரிவை ,, மங்கை, மடந்தை, இளம்பெண், பேரிளம் பெண், என்று எட்டு பருவம்
பெண்ணிற்கு குறித்துள்ளார்கள். பேதை நான்கு அல்லது ஐந்து வயது பெண்ணை பேதை என்றும் ---6 அல்லது யேழு வயது பெண்ணை பெதும்பை என்பார்கள். பிறகே அரிவை, தெரிவை யாகும் --- மங்கை என்பவளுக்கு
பதினாறு வயது பருவம் பதினெட்டு வரை மடந்தை. பின்னே இளம்பெண்
பெதும்பைக்கு போராட்டம் என்பது விநோதமான ஒன்று. தமிழில் எழுத்துக்களை மட்டும் படித்து எழுத சரியாகுமா?
இலக்கியங்களை படியுங்கள். இலக்கணப் பாட்டு எழுதுங்கள். -. காதலையும் கற்பழிப்புமா எழுதுவது.நல்ல எண்ணம் எண்ணுங்கள்
09-Jun-2022 7:11 am
ஹைக் கூ
மழையில்
நனைந்தது
குளிர்
நிலத்தில்
முளைத்தது
தளிர்
கருப்புக்கு
வெள்ளை
எதிரி
கண்களின்
ஜலம்
வண்ணம்
ஒழுகும்
வானம்
கூரை
புகையின்றி
எறிகிறது
வயிறு
மனப்
புழுக்கம்
புலம்பல்
துாக்கத்தின்
ஏக்கம்
கனவு
கிருமிகளின்
போராட்டம்
நோய்
காற்றின்
முகவரி
இலையசைவு
ஆகாயப்
புன்னகை
நட்சத்திரம்
கைபேசி விசைப் பலகையை
கைவிரல்கள் முத்தமிட
முகநூலை மூட மனமில்லை
கொட்டும் தகவல் மழை
எழுத்துச் சுதந்திரம்
வகுப்பறையில் பேசாதே அதட்டும் ஆசிரியர்கள் போராட்டத்தில் கத்தாதே அடித்து... (MuRaNi)
02-Jun-2021 6:31 pm
வகுப்பறையில்
பேசாதே
அதட்டும் ஆசிரியர்கள்
போராட்டத்தில்
கத்தாதே
அடித்து விரட்டும் காவலர்கள்
விதைத்தது முளைத்தது
ஏழையின் வடிவில்
வீட்டு வாசலில் இறைவன்
விரட்டி அடித்தனர்
புரோகிதர் புடைசூழ
கடவுளின் பெயரால்
கொட்டோ கொட்டென
கொட்டும் பணமழை
காணிக்கை
கோவில் கோபுரத்திற்கு கீழே
வாசலில்
சில்லரைக்கு
திருவோடு ஏந்தும்
பிச்சைக்காரர்கள்
கோவிலுக்கு உள்ளே
சன்னிதானத்தில்
பணத்துக்கு
தட்டேந்தும்
அர்ச்சகர்கள்
ஒற்றுமையில் வேற்றுமை
தடுத்து விளையாடும்
மட்டை பந்தாட்டம்
உதைத்து விளையாடும்
கால் பந்தாட்டம்
தாவி விளையாடும்
இறகு பந்தாட்டம்
மோதி விளையாடும்
கபடி யாட்டம்
இவை எல்லாம்
ஒருங்கே
சோ்த்து விளையாடும்
மனிதனின் ஆட்டம்
தீண்டாமையாட்டம்
புதிய கண்ணகி********************கற்பு கடைச்சரக்காய் மாறிப் போச்சு,கவலையில்லை கண்ணகிக்கு,நம்பிக்கையில் தீ... (முபாலு)
03-Aug-2020 11:43 pm
புதிய கண்ணகி
********************
கற்பு கடைச்சரக்காய் மாறிப் போச்சு,
கவலையில்லை கண்ணகிக்கு,
நம்பிக்கையில் தீ வைத்து
நாளொரு மேனியாக
நல்லவன் போல் வேசம் போடுகிறானே..
அதுதான் கோபம்.!
துரோகத்தின் உச்சத்தில்
தீப்பற்றி எரிகிறது உடம்பெங்கும்,
ஆணும் பெண்ணும் செய்த தவறுக்கு,
பெண் மட்டும் பலியாவது
யார் வகுத்த நியதி,
நீதி கேட்டுப் போராடினால்
ஒரு தடவை போன கற்பு
ஓராயிரம் தடவை போகும்
ஊடகங்களால்,
அவளே முடிவெடுத்தாள்
அவளே தண்டனை கொடுத்தாள்,
அனுபவித்தவளுக்கே தெரியும் வலியின் கொடுமை!
காமத்துடன் வந்தவனை
மோகத்துடன் பார்த்தாள்,
அணைத்தாள் அணைத்தான்,
ஆடைகளற்ற நேரத்தில்
அறுத்தெடுத்தாள் ஆணுறுப்பை,!
கண்ணகியாய் வேண்டும் என்பவர்கள்
இராமர்களாய் இருப்பதில்லை,
மாதவியாக ஆக்கி விட்ட சமூகத்தில்,
கண்ணகி வேடங்கள்
இரவெங்கும் அரங்கேறுகிறது வெளிச்சத்தில்!
***********************************
மேலும்...