கனவு மகள் ..................... கனவே கலையாதே, என் கவிதை...
கனவு மகள்
.....................
கனவே கலையாதே,
என் கவிதை உறங்கி விடும்.
அவளின் பிதற்றல்களை ஒற்றை மொழியில் சொல்வது
என் வரிகள்தான்.
கனவு தெரியாக் குழந்தையவள்.
நிழல்களில் நிஜம் தேடும்
அலை தீண்டாக் கரையவள்.
சிற்பத்தில் உயிர் தேடும் சிறுமியவள்.
சின்னச் சின்ன வார்த்தைகளை கோர்த்து
வரிகளாய் வடிவம் கொடுக்க நினைத்தும்,
கவிதையாக்க முடியாமல் தவிக்கிறாள்.
பிறக்காத என் குழந்தையவளுக்கு
இன்னும் கனவில்தான் கவிதைப் பாடம் கற்பிக்கிறேன்.
கனவே! கலைந்து விடாதே....
_ ஏ.எம்.பறூஸ்-