எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் முதற் காதலுக்காக நான் எழுதிய முதல் கவிதை......

என் முதற் காதலுக்காக நான் எழுதிய முதல் கவிதை...

என்னவன் என்னை பாராட்டி ரசித்த முதல் கவிதை...
இந்த கவிதைக்காகவே உன்னுடன் நூறாண்டு காலம் வாழ ஆசை என அவனை கூற வைத்த கவிதை...
இன்றும் என் நாட்குறிப்பின் முதல் பக்கத்தின் வார்த்தைகள் இதுவே...
"யாதுமறியா பேதையாய் வந்த என்னை அழகிய காதல் சிற்பமாய் செதுக்கிய எனது அன்பானவனே...
பிறரியா உன் கடைக்கண் பார்வை நானறிவேன்...
உன் விரல்நுனி மச்சம் நானறிவேன்...
உன் கன்னக்குழி சிரிப்பு நானறிவேன்...
உன் செல்ல கோபங்கள் நானறிவேன்.. 
உன் இதழ் புன்னகைத்த தருணங்களையும் அறிவேன்...
உன் விழி சிந்திய கண்ணீரையும் அறிவேன்...
உன் காதல் சொல்ல வந்து நீ தவித்த நொடிகளையும் நான் அறிவேனடா...
உன்னை முழுவதும் அறிந்தவளாகிய நான் உன் காதலை அறியாமல் இருப்பேனா???
காதல் கூறி விடை தெரியா வினாவாய் நீ நிற்க...
நட்பு எனும் போர்வை போர்த்திய காதலியாய் நான் நிற்கிறேன்...."

நாள் : 18-Jun-18, 8:09 pm

மேலே