முத்தத்தின் போது உடையும் சாதியும் மதமும்.... ஏன் முழுவதுவாய்...
முத்தத்தின் போது
உடையும் சாதியும் மதமும்....
ஏன் முழுவதுவாய்
உடைவதில்லை...
காதல் உணரும்போது
தெரியாத சாதியும் மதமும்...
ஏன் பிரியும் பொழுது
சாதி மதத்தையே காரணம்
காட்டுகிறீர்கள்....
நண்பர்களிடம் சாதி மதத்தை
பார்க்காத நாம்...
ஏன் அவன் சாதி மத கொடுமைகளை அனுபவிப்பதை உணர மறுக்கிறோம்...
மச்சான் மாமன் மாப்பிள்ளை
என அழைக்கும் நீ...
ஏன் உண்மையில் மாமனாக மச்சானாக ஏற்பதில்லை...
சாதியும் மதமும் தான்
தடுக்கிறதா....
என் நண்பன் நல்லவன் நல்ல மனிதன் என்றுறைக்கும் நீ....
ஏன் அவனை மனிதனாகவே
நல்லுறவாக ஏற்க மறுக்கிறாய்...
சாதியும் மதமும் தான்
தடுக்கிறதா....
சாதி மதம் எலாம் கடந்தது தான் நட்பென்றால்....
ஏன் சாதியால் மதத்தால் பிரித்து வைத்து பார்க்கிறாய்...
எனது நண்பன் எனக்காக உயிரை கொடுப்பான் என்கிறாய்....
ஏன் அவனுக்காக சாதியையும் மதத்தையும் விட்டு சமத்துவமாய் ஊரோடு சேரியை சேர்த்து வாழ வேண்டியது தானே....
எங்கே சாதியில்லை
இருக்கிறது
எல்லா இடத்துலேயும் இருக்கு...