உறவுக்கு கிடைத்த ஊதியமே இறைவன் இன்பத்தில் படைத்த காவியமே...
உறவுக்கு கிடைத்த ஊதியமே
இறைவன் இன்பத்தில் படைத்த காவியமே
மரணத்தின் வலிகளெல்லாம் பிரசவத்தில் கண்டேன்
உன் முதல் பசி தீர்த்தில் ஆனந்தம் கொண்டேன்
பத்து மாதம் தவம் தானே
இந்த பால்நிலா முகம் காண
நீ என்னை கருவில் உதைத்து போதாத
உன் தந்தையின் மார்பில் உதைத்தும் ஆசை தீராதா
யாரும் பேசாத மொழிகள் நாம் பேசவேண்டும்
உன் உமிழ்நீரின் வாசம் என் மேனியெங்கும் வீசவேண்டும்
கன்னத்தில் சின்ன கடி தினம் தந்திடு அடிகடி
பதிலுக்கு ஆயிரம் முத்தங்கள் தருவேன் நீ கேட்டபடி
நான் காணாத அருவியெல்லாம் உன் கண்களில் வளியும்
அந்த அழுகைக்கு காரணம் என்னவென்று எனக்கு மட்டும் தான் தெரியும்
படைத்தவனும் பதுங்குவான் உன் சினத்தை கண்டு
பகைவனும் மயங்குவான் உன் சிரிப்பை கண்டு
தவழ்ந்தது போதும் விழுந்து எழு தொடங்கு
இனி வாழ்வின் வலிகளை தாங்கிட நீ கொஞ்சம் பழகு
அன்னையின் மடியில் உறங்கியது போதுமட
என் ஆசையெல்லாம் உன் புகழ் உலகை ஆழ வேண்டும்