தங்கம் ஏனோ தகரம் ஆனது செல்லம் தங்கம் கண்ணு...
தங்கம் ஏனோ தகரம் ஆனது
செல்லம்
தங்கம்
கண்ணு
அம்மு
அனைத்தும் அவனுக்கு நான் ஆனேன்
ஆர கட்டி தழுவி
முத்தம் இட்டு,
தோள்களில் சுமந்து
வருடிய காற்றை கேட்டாலும்
வாங்கி தருவான்.
கால் வலித்தாலும்
பல மைல் ஆன போதிலும்
எனக்கான பொருளை
தேடி திரிந்து
வாங்குவது
என் தகப்பனின் இலட்சிய கனவு
தங்கம் ஏனோ தகரம் ஆனது
தாகம் தீராது
தங்கமீன்கள் வாரது
வயிற்றுக்கு சோறு இராது.
ஆனால்
வாரம் 200 ரூபாய் தான் வரும்
அதன் வழி வாழ்க்கை ஆனது
தகப்பன் மறுமணம் ஆனதும்..