வலிகள் தாங்கிய இன்பம்...... காலத்தின் கசப்புகளை கனிவுடனே சுமந்து...
வலிகள் தாங்கிய இன்பம்......
காலத்தின் கசப்புகளை
கனிவுடனே சுமந்து கொண்டு
காலம் கடந்து பெற்றெடுக்கும்
குழவி அழுகை இன்பம்............
பெற்றெடுத்த பொன்மகளை
பேணி காத்து வளர்த்து வந்து
மற்றொருவன் கையில் சேர்க்கும்
தந்தை கண்ணீர் இன்பம்.........
ஆண்டு பல கடந்தாலும்
அயராது பயிற்சி பெற்று
தடைகள் பல மீறி ஓடி
தடம் பதிக்கும் வீரன் மார்பில்
ஏந்தும் கொடி இன்பம்.....
இரவு பகல் கண் விழித்து
இமைகள் மூடா உரை எழுதி
இன்ப நூல் வெளியிடும்
கவிஞர் வார்த்தை இன்பம்.....