எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொறுப்பும் கடமையும் -------------------------------------- புவியில் பிறந்த அனைவருக்கும் தன்னுடைய...

  பொறுப்பும் கடமையும்
--------------------------------------


புவியில் பிறந்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்வில் பொறுப்பும் கடமையும் உண்டு . ஒவ்வொருவரின் வயது நிலைக்கேற்ப இவை மாறுகின்றன .ஆனால் அனைவரும் அதனை சரிவர செய்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது . முதலில் ஒன்றை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் . "#பொறுப்பு" என்பது வேறு , "#கடமை" என்பது வேறு .


ஒவ்வொருவரும் தாம் முதுமை அடைவதற்கு முன்பு , அதாவது தம்மால் ஏதும் செய்ய இயலாத நிலையை எட்டும்வரை , தனது பொறுப்பினை உணர்ந்து , ஆற்ற வேண்டியக் காரியங்களை பொறுமையுடன் செய்திடல் வேண்டும் . அவ்வாறு செயல்பட்டால் மனதில் திருப்தியும் ஆனந்தமும் உண்டாகும் . இதனால் குடுமபத்தில் மகிழ்ச்சியும் நிலவும் . மற்றவர்களும் வியந்து நம்மை வாழ்த்துவர் . பொறுப்பினைத் தவிர்த்து , பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் உலகமே நம்மைத் தூற்றும் என்பது மட்டுமல்ல , குற்ற உணர்வு நம்மைத் தாக்கும் . ஆகவே நமது பொறுப்புகளை தட்டிக் கழிக்கவே கூடாது எந்தக் காரணத்திற்காகவும் .


கடமை என்பது பெற்றவர்களுக்கும் , நம்மால் முடிந்த அளவு சமுதாயத்திற்கும் , ஆற்றுகின்ற செயல்பாடுகள் ஆகும் . அதை என்றும் தவிர்க்கவோ, விலகி செல்வதோ மாபெரும் குற்றமாகும் . பெற்றவர்க்கும் , பெரியோர்க்கும் ஆற்றுகின்ற கடமைகள் ஒருவிதத்தில் நமது நன்றிக்கடன் என்பதை உணர வேண்டும் . அப்போதுதான் நாம் பிறந்தற்கும் , மனிதன் என்ற இனத்திற்கும் ஒருவித அர்த்தம் உண்டு. அதேநேரத்தில் நாம் எதையும் எதிர்பார்க்காமல் செய்வதே உண்மையான கடமையாகும் .


மனிதராக பிறந்த நாம் பொறுப்புடன் செயல்பட்டு , தமது கடமைகளை செவ்வனே ஆற்றிட வேண்டும் என்பதே எனது விழைவு , கோரிக்கை ! இளைய சமுதாயம் இதனை அறிவுரையாக அல்ல , அனுபவத்தில் விளைந்த ஆலோசனையாக கூறுவதும் எனது கடமை என்று நினைக்கிறேன் !


பழனி குமார் 
​03.09.2019  

நாள் : 3-Sep-19, 8:21 am

மேலே