எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*எது அழகு* ??? அகிலமே பிறந்திருப்பது அழகா? இறைவன்...

*எது அழகு* ???


அகிலமே

பிறந்திருப்பது

அழகா?



இறைவன்

படைப்பில்

பிறந்திருக்கும்

உயிரினங்கள்

அழகா?



ஆக்கப்பட்டவை

அழகா?

அழிக்கப்பட்டவை

அழகா?

ஆக்கப்படுபவை

அழகா?



உருவம்

கொடுத்திருக்கும்

சிற்பங்கள்

அழகா?



புடைக்கப்பட்ட

புடைப்பு (கற்சிலை)

அழகா?



செதுக்கப்பட்ட

சிலை

அழகா?



செதுக்க

பயன்படுத்திய

உளி

அழகா?



இல்லை

செதுக்கப்பட்டவன்

அழகா?



இயற்கை

வனங்கள்

அழகா?



வனங்களில்

அசைந்தாடும்

மரங்களின்

ஓசை

அழகா?

கூக்குரலில்

கூச்சலிடும்

குருவிகள்

அழகா?

விலங்கினங்கள்

அழகா?



பறவைகளின்

ஓசையும்

விலங்குகளின்

ஒலிகளையும்

கண்டு மயங்கி

இரசிப்பவர்

அழகா?



காய்ந்த

ஓடைகளில்

நீர் ஓடுவது

அழகா?



ஓடும் நீரில்

துள்ளியாடும்

மீன்கள்

அழகா?



விண்ணோடு

மண்

அழகா?

மண்ணோடு

விண்

அழகா?



சுட்டெரித்திடும்

கதிரவன்

அழகா?



குளிர்ந்திடும்

திங்கள்

அழகா?



அகமோடு

கலந்திடும்

காதல்

அழகா?

புறமோடு

கலந்திடும்

போர்

அழகா?



மானுடமே

வாழ்ந்திட

பிறந்திருக்கும்

திணை

அழகா?

திணையை

ஐந்தாக

பகுக்கப்பட்டிருக்கும்

பகுப்பு

அழகா?



குன்றுகளும்

மலைகளும்

நிறைந்து

வான்பார்த்து

இருக்கும்

குறிஞ்சி

அழகா?



மண்ணோடு

உறவாடி

விண்ணோடு

வாழ்த்துப் பெற்று

நிமிர்ந்து

நின்று

இருக்கும்

முல்லை

அழகா?



மண்ணோடு

பல விதைகள்

முத்தமிட்டு

மலர்ந்து

வயல் எங்கும்

செழுமையாக

காட்சியளிக்கும்

மருதம்

அழகா?



விண்ணுக்கும்

மண்ணுக்கும்

உயிராக

பிறந்து

நிரம்பிய

இடங்களுக்கு

பெயர் சூட்டிய

நெய்தல்

அழகா?



பல வகை மண்

இருந்தாலும்

மணலோடு

மல்லுகட்டி

போர் செய்த

பாலை வனம்

அழகா?



*..................அழகு? அழகு அழகு?..................*



கவிஞர் வெஞ்சுடர் க.பிரகாஷ்


எழுதுகோலின்

மையிட்ட

*எது அழகு* ?

என்னும்

கவிதை

அழகா?

பதிவு : Kprakash
நாள் : 8-Dec-19, 10:34 pm

மேலே