எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங்கல்-2020 படைத்த-கவிதை : புனிதஇருதய தமிழ் கத்தோலிக்க சங்கம்...

                                                                                                                                 
பொங்கல்-2020 படைத்த-கவிதை : 

புனிதஇருதய தமிழ் கத்தோலிக்க சங்கம் -கலிபோர்னியா

தமிழனும் உழவனும் வாழ்வாங்கு வாழ!
உங்கள் பொங்கல் வாழ்த்தை- வணங்கிநான் 

என் மகனுக்கு கூறிய ஓர் கவிதை!
என் தந்தை எனக்கெழுதிய அக் கவிதை!

கடிதம் காலம் சென்ற முறையானது!
மின்னணுவின் வேகம் இன்னும்
என்னவெல்லாம் செய்யுமோ- தெரியாது!
இருந்தாலும் இதை-நான் புலனத்தில்(வாட்ஸாப்ப்)
எழுதுவது- எனக்கு தெரிந்த
உலகை உனக்கு காட்டத்தான்!

நேற்று! இன்று! நாளை!
------------------------------
நேற்று!
பிள்ளை பருவத்தில் -என்
பிடரி பிடித்து!
அமர்ந்து பயணித்தாய்-நான்
நடக்கும்போது..
நாற்காலியாக்கினேன்-என் தோள்களை
உனக்கு -- ஏன் தெரியுமா?
எனக்கு தெரியாத உயரமும்
தூரமும் உனக்கு-தெரிய
வேண்டுமென!
அப்பனும் பிள்ளையும் ஒன்றாய்
அமரக் கூசியது-அக்காலம்!
நான் அப்படியல்ல- உன் தோழனாய் எழுதுகிறேன்!

இருக்க வேண்டும்-இன்று நீ!

வீழ்ந்த அருவியாய்-உன்எண்ணங்கள்!
வீழ்ந்தாலும் சிதறாமல் ஓடுகிற
நதியாய் உன் சிந்தைகள்!
ஓடிய நதி நிற்காமல் அடைந்த
இலக்காய் உன் வெளிப்பாடுகள்!ஓடிக்கொண்டே இருக்கிறவரைதான்..
ஜீவா நதி!-இல்லையெனில் அது
மணற்படுகையே!
இயங்கிக்கொண்டே இருக்கிறவரைதான்..
இதயம்! உன் இதய வழி
நல் வழியாய் இருக்கும் வரைதான்-அது
வாழ்க்கை இல்லையெனில்- அது
நாட்களைக் கடத்தும் நாடகமே!
வாழ்க்கைக் கணக்கை
வருடங்களால்
எழுதுதல் மட்டுமே
-வழக்கம் இங்கு.
கணத்துக்குக் கணம் வாழ்வோருக்கு..
கடந்த காலம் என்றும்
எதிர் காலம் என்றும்
எதுவும் இல்லை.
இறந்த காலம் நொந்து!
எதிர்காலம் சிந்தித்து!-உன்
நிகழ் காலத்தை தொலைத்து விடாதே!
எதையும் பெரிதென்று நினைத்து
பின் வாங்காதே!

வானம் வரை வளர்ந்திருந்தாலும்!
அடிவாரத்தில் தான்
ஆரம்பிக்கிறது மலை!
வால் அறுந்த பல்லியைப் பார்!
வால் இழந்தாலும் - அது
வாழ்வை
இழப்பதில்லை!
முடி இழந்தால் கூட
தலையை இழந்ததாய்
முனகுவது 
மனிதன் மட்டுமே!

தோல்வியடையும் போது
துவண்டு விடாதே!
தோல்வி ஒன்றும்
தொடர்கதை அல்ல;
தொடர்கதைக்கும் கூட
முற்றுப்புள்ளி உண்டு.
தோற்கப் பிறந்தவனல்ல நீ!

அலைகள் எழுந்தும் வீழ்ந்தும் மீண்டும் எழுந்தும்
எழமுடியாமல் அது கரையடைந்தாலும்-அது
புது அழையாய் உருவெடுக்கிறது-பார்!

உன்னை 
உரசிப் பார்ப்பவர் 
பார்க்கட்டுமே
உரசிப் பார்ப்பதில்
பெருமை கொள்ள
உரை கல்லுக்கு
என்ன இருக்கிறது!
உரைகல்லுக்குப் பெருமை - தங்கத்தை
உரசிப் பார்ப்பதால் மட்டுமே.
தெரிந்துகொள்!

நீ தனிமரமாய்
தனித்து விட்டாலும்
தவித்து விடாதே!
தனிமரம் தோப்பாகாது- என்பர்
தளர்ந்து விடாதே...
தனிமரம் தோப்பு ஆக்கும்.ஆலமரம் போல
பரந்து வளர்ந்தால்
ஆயிரம் ஆயிரமாய்
இளைப்பாறுவார்;
ஓங்கி வளர்ந்தாலும்
ஊர் தின்னும் தீயை
யார் மதிப்பார்?
மரம் ஏறுவது
உன் பங்கு என்றால்
எட்டும் வரை தாங்குவது
என் பங்கு.

யோசிக்காமல் நீ செய்யும்
ஒவ்வொரு செயலும்
உன்னை யோசிக்க வைக்கும் ...-யோசித்து செயல்படு!
சொல்லப்படாத சிந்தனை
உன்னை வளர விடாது!

திறக்கப்படாத
 அணைநீர் போல!
கவனத்தில் கொள்!சில விசயம்
 சினிமா போல
சிந்தித்தது..
வரும்வரை
 செயல்படலாம்!
சில விசயம்
 நாடகம் போல 

நடக்கும் போதே
நல்லபடியாக
 நடந்திட வேண்டும்;
சில விசயம்

நடக்கும் முன்னே

ஒத்திகைப் பார்க்கலாம்
நாடகம் போல..
சில விசயம்
ஒத்திகைக் கூட

பார்க்க முடியாது..
பிறப்பு, இறப்பு போல!

மட்பாண்டமாய் இருந்து கொண்டு
மலையோடு மோதுவது-
அறிவு அல்ல
உளியாய் உருமாறினால்
-
உடைக்கலாம் மலையை

சிற்றெறும்பைப் பார்த்து-
சிங்கமென
பயம் கொள்ளாதே!
சிங்கத்தைப் பார்த்து
சிற்றெறும்பென இறுமாப்புக் கொள்ளாதே!
இரண்டும் ஆபத்தே.

மீன், நாவாய்
.
இரண்டுக்குமே வாழ்க்கை
நீரில்தான்....

நாவாய் மூழ்கிவிட்டால்
 வாழ்க்கை இல்லை;

மீன் மூழ்காவிட்டால்
 வாழ்க்கை இல்லை;

அதனதன் தடத்தில்

அதனதன் வாழ்க்கை

தடம் மாறுதல் ஆபத்து

தடம் மாற்றுதலும் ஆபத்தே!கற்பனை கலந்து

படித்த
 கவிதையல்ல வாழ்க்கை.

புலி பிடித்துவிடும் 
என்றாலும்
புள்ளிமான் 
ஓடாமல் இருப்பதில்லை!
மான் ஓடிவிடும்
 என்றாலும் - 
புலி
துரத்தாமல் இருப்பதில்லை!
உயிருக்கானப் போராட்டம்
இறுதி மூச்சு இருக்கும் வரை....
ஒவ்வொரு போராட்டமும் 
ஒவ்வொரு வடிவம்!

நேற்று முந்தா நாள்!
வேட்டி கட்டி
வெட்டி
கதைகள் பேசி!

வெள்ளந்தியாய் -ஊரோடு
சிரித்து
வாழ்ந்த முன்னோர்கள்!
உன் பாட்டன்!-
துடிக்கும் இதயம் நின்றவுடன்
ஊரே துடித்த! இதயங்கள்-வாழ்வில்
அவன் சேர்த்த மிக உயர்ந்த சொத்து...பட்டு சட்டை போட்டு

பட்டென பேசி
பள்ளி
குழந்தை போல்
கோவித்து

கூட்டான குடும்பம் விட்டு

தனியாய் தனி குடும்பத்தில்

தன் குடும்பத்தோடு

சிரித்து மகிழ்ந்த
-நாங்கள்
முந்தாநாள்!


காட்டன் சட்டை போட்டு

ஊரை விட்டு வந்து
கையில் கைப் பேசியோடு
அம்மாவின் மடியில்
படுத்துறங்க முடியாமல்

மடியில் மடிக் கணினியோடு

மணிக்கணக்காய் வேலை பார்த்து

தான் தன் மனைவி மக்கள்-என
ஆப்பிள்-ஐ குடும்பமாய் கடித்து
உள்ளார்ந்து சிரிக்க முயற்சித்த
நீ இன்று !
நாளை ?

அன்று!
என் தலைமுறை
அன்னையை நினைப்போம்-என்றும்
இன்று!
உன் தலைமுறை
வருடம் ஒருமுறையாவது நினைத்துக்கொள்!-என்று
ஓர் தினம்-அன்னையர் தினமோ!-ஆனால்
என்றென்றும்
ஓர் நொடிப்பொழுதும்- தன்
பிள்ளையை நினைத்திருப்பாள்-அன்னை
அதனால்தான்- இல்லையோ!
பிள்ளையர் தினமென்று-ஒன்று.

அன்று!
நான் தொலை பேசியை
பார்த்ததே -நீ
பிறந்த பின்தான் -ஆனால்
இன்று!
உன் பிள்ளை பிறக்கும்போதே!
கையில் கை பேசிஅன்று
கிரகாம் பெல்
பேர் வைத்தான்- தொலை பேசி
பேச-தொலைவிலிருப்பவர்களிடம்
தொலை பேசி -பிறந்தது!
நேற்று!
அவனும் நோக்கினான்!
அவளும் நோக்கினால்!
நோக்கியா(Nokia)-பிறந்தது!
இன்று!

நீயே போனாகவே
மாறிவிட்டதால்!
ஐபோன்(iPhone-நான் போன்)-பிறந்தது!
ஸ்டீவ் ஜாப்ஸ்-அதி புத்திசாலி!
பேர் வைத்தான்-
ஐபோன்(iPhone-நானே போன்)
ஐபேட்(iPad-நானே அட்டை) - என்று!
வைக்கவில்லை-பார்
மை-போன்(mYPhone-என்னுடைய போன்)-என்று.மகிழ்ச்சி இன்று!
உன் பிள்ளைகளின் -தலைமுறை!
வலை கடல் மூழ்கி
நட்பை தேடி -இன்று!
இது முன்(ஏற்றமா) இல்லை தடு(மாற்றமா)
காத்திருப்போம்!
காலத்தின் பதிலுக்காய்!
அமேசான்(Amazon) காட்டை
டப்பிங் படத்தில்
மட்டுமே கேட்ட
நாங்கள்!
இன்று
உன் பிள்ளைகல்
அமேசான்(Amazon) சென்று
விழையாடுகிறார்கள்!-மகிழ்ச்சி!
கவனமாய் பார்த்துக்கொள்!
அவர்கள்.. தொலைந்துவிடாமல்!

பிடிப்புகளை செதுக்கினால்
தான்
பிறக்கும் அழகிய சிற்பம்,

வாழ்க்கையும் ஒரு
வசிகரச் சிற்பமே....

தேவையற்ற பிடிப்பை
 உதறித் தள்ளினால்

தேவையான சிற்பம் பிறக்கும்.

வாழ்க்கை என்பது

வாத்தியக் கருவி போல;

இசைக் கருவியில் இல்லை

இசையின் நுட்பம் - அது

இசைப்பவனிடம் மட்டுமே உள்ளது.

நீ எப்படி
மீட்டப் போகிறாய்?

குறைகளைச் சுட்டி
உன்னைக்
குதறிவிட விரும்பவில்லை
-நான்
குறை நிலவைக் கூட
பிறை நிலவென்று
பேசி மகிழ்கையில்
என் 
பிள்ளையின்
குறைகளை பெரிதாக்கி

பிரச்சாரம் செய்வேனா?பழம் பெருமை பேசவே

பழகிப் போனோம்
நாம்
பழம் பெருமை என்பது

தலைப் பெழுத்து (இனிசியல்)

தலைப் பெழுத்து பெயராகாது.
உன் பெயரென்பது

உன் வாழ்க்கையே

உன் பெயரை 
எப்படி எழுதப் போகிறாய்?

இதை சொல்லி முடித்து!
பின்னே உணர்ந்தேன்!
என் மகன்
அயர்ந்து தூங்கிவிட்டான்!
என் மகள்
அவள் அட்டையோடு
அவளறைக்கு சென்று!ஆனாலும் இதுவரை
பொறுமையோடு
கண்கள் உங்கள் -ஐபோனில்
இருந்தாலும்
உங்கள் செவிகள் கொடுத்து!
ரசித்த தமிழ்
நெஞ்சங்களுக்கு
நன்றி கூறி
வணங்கி
விடை பெற்றுக்கொள்ளும்-

உங்கள்- அந்துவன்!

பதிவு : Anthuvan
நாள் : 13-Jan-20, 5:44 am

மேலே