உதிரம்... தியாகமானது - வீரர்கள் மாண்டபொழுது... உயிரூட்டும் தாய்...
உதிரம்...
தியாகமானது - வீரர்கள் மாண்டபொழுது...
உயிரூட்டும் தாய் பாலானது - தாயின் தேகத்தில் இருந்த பொழுது...
வலியானது - சதைகள் பிழந்து காயமான பொழுது...
காதலானது - கடிதத்தின் வார்த்தைகளான பொழுது...
உழைப்பானது - அப்பாவின் வியர்வை வழிந்த பொழுது...
உன்னதமானது - உதிரத்துடன் உயிர் பிறக்கும் பொழுது...
ஆனால்...
உதிரமும் கருமமானது - மாதவிடாய்ச் சுழற்சியின் பொழுது...
அவ்வுதிரமின்றி.. நீயுமில்லை.. நானுமில்லை.. மானுடமுமில்லை.. மனிதன் ஆளும் இவ்வுலகமும் இல்லை என்பதை மறவாதே.. மானுடா...
- செல்வ கிருஷ்ண மானிஷா