தமிழே.... நீ சித்திரையில் தான் மலர்ந்தாயோ...! (இல்லையெனில்) வைகாசியில்...
தமிழே....
நீ சித்திரையில் தான் மலர்ந்தாயோ...!
(இல்லையெனில்)
வைகாசியில் வளர்ந்தாயோ...!
(இல்லையெனில்)
ஆனி மாதத்தில் இந்த உலகை ஆண்டயோ...!
(இல்லையெனில்)
ஆடி மாதத்தில் எங்களின் மரபுக்குள்
புகுந்தாயோ....!
(இல்லையெனில்)
ஆவணியின்
கண்மணி தமிழே..
தமிழரை காதலிக்க வந்தாயோ...!
(இல்லையெனில்)
புரட்டாசியில் எங்கள் உயிருக்குள் புகுந்தாயோ..!
(இல்லையெனில்)
ஐப்பசியில் எங்களின்
உணர்வின் பசியை தீர்த்தாயோ....!
(இல்லையெனில்)
கார்த்திகையில் இவ்வுலகிற்கு கால்பதித்தாயோ...!
(இல்லையெனில்)
மார்கழியில் எங்களின் இதழ் வழி நுழைந்தாயோ....!
(இல்லையெனில்)
வள்ளுவனின்
வழி வந்த தை மாதத்தில்
தான் பிறந்தாயோ....!
(இல்லையெனில்)
மாசியில் எங்கள் நெஞ்சத்தில் தவழ்ந்தாயோ...!
(இல்லையெனில்)
பங்குனியில்
எங்களின் உயிரோடு கலந்தாயோ...!
(இல்லையெனில்)
இந்த பனிரெண்டு மாதங்களையும்
ஒரே நாளில் தான் பெற்றாயோ.....!
என்னாளும் நன்னாளே.....!
தமிழன் என்று சொன்னாலே....!
அன்நாளும் பொன்னாலே.....!
என் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..❣️💌 create by ✍️ thamim ✍️