தலைப்பு:வாழ்க்கையின்.போராட்டம் மயக்கம் கொண்ட மனிதா...! தயக்கம் ஏனடா...! தோல்வியும்...
தலைப்பு:வாழ்க்கையின்.போராட்டம்
மயக்கம் கொண்ட மனிதா...!
தயக்கம் ஏனடா...!
தோல்வியும்
தொடங்கட்டும் இனிதா...!
வாழ்க்கை உனக்கு கற்றுத்தரும் தினம் தினம்... புதிதா....!
தொடரட்டும்
வாழ்க்கையை நோக்கி
உன் போராட்டம்... எளிதா....!
திசை அறியாத
உன் திண்டாட்டம்..!
திசை அறிந்தால்
உன் வாழ்வில் கொண்டாட்டம்...!
திசை அறிந்தவுடன் வேண்டாம் உனக்கு தற்பெருமை எனும் ஆட்டம்..!
தேடித் தேடி தேடிய
உன் இலக்கை அடைந்தாலும்..!
ஆடி ஆடி... தற்பெருமை உன்னை அழித்தாலும்...!
வீழ்வதும் ஒரு நாள் வாழ்வதும் சிலநாள் மறவாதே ஒருநாளும்..!
பிஞ்ச செருப்பு இட்டு கால் பிளக்க கத்திரி வெயிலில் நடந்தாலும்..!
பிஞ்ச செருப்பு கூட இல்லாமல் வெறும் காலில் நடப்பவர்களை கண்டு
விரைந்து செல் நிற்காதே ஒருநாளும்...!
வாழ்க்கையை நோக்கி
ஓடு பவனுக்கு பாதை அறியவில்லை எனில்...!
பலநூறு வருடம் ஓடினாலும் கைகொட்டி சிரிக்கும் மரத்தில் நிற்கும் அணில்....!
இலக்கு ஒன்றை உன் மனதில் விதைத்து...!
வறுமை எனும் வாட்டலை உன் மனதில் புதைத்து...!
விரைந்து செல் மனிதா விரைந்துசெல் இந்தஉலகமே ஒரு நாள் வந்துசேரும் உன்னை மதித்து...!
இறைவனின் படைப்பினங்கள் அனைத்தும் தன் தேவைகளை பயமில்லாமல் தானே பூர்த்தி செய்கிறது...!
மனித இனம் மட்டும் தன் தேவைக்கு மிஞ்சிய பூர்த்தியை
அடைவதற்கு
வாழ்க்கையைக் கண்டு பயந்து மனம் தளர்கிறது...!
தேவைக்கு மிஞ்சிய
தேடலை தேடாத மனிதனின் மனம் மரணம் வறை மனம் குளிர்கிறது...!
உன் உடல் சோர்ந்தாலும்...
உன் மனம் சோராமல் உயரத்தில் ஏறி நின்று பார் நீ பார்த்து பயந்த உலகம் உனக்கு கீழே தெரிகிறது....!
உருவாக்கம்❣️உங்கள் நண்பன்...தமீம்✍️💌