தலைப்பு::வாய்ப்பு...! என்னை வந்தடைய உனக்கு வேண்டும் எத்தனை இரவு....!...
தலைப்பு::வாய்ப்பு...!
என்னை வந்தடைய
உனக்கு வேண்டும்
எத்தனை இரவு....!
நான் தொடுவதெல்லாம்தெல்லாம்
எனக்கு ஏற்படுத்துகின்றன சரிவு....!
வாய்ப்பே உன்னை அடைய
ஏன் எனக்கு எட்டவில்லை அறிவு....!
உன்னை அடைந்தாலும்
ஏன் என்னிடமிருந்து
உனக்கு இந்த பிரிவு....!
நீ என்னிடம் வரப் போகிறாய் என்று தெரிந்தாலே
கூடிவரும் உறவு....!
கனவுகளோ கண்களுக்குள்ளே..!
காண்பதற்கோ எல்லைகள் இல்லை...!
வாய்ப்பே நீ மட்டும் ஏன்
என் வாழ்க்கைக்குள் வருவதில்லை....!
மன் உன்னை மறைப்பதற்குள்..!
வின் உன்னை அழைப்பதற்குள்..!
பாலூட்டி வளர்த்த உறவுகள்
உன்னை பாடையில் சுமப்பதற்குள்...!
செடிகள் உன்னை
சூல்வதற்குள்....!
வாய்ப்பு எனும் விடியல்
உன்னை வந்தே தீரும்...!
எதிர் நோக்கி விழித்திரு
ஒவ்ஒருநாளும்....!