எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சொல்லாத காதல்: என் காதல் இதயங்கள் இடம் மாறிய...

சொல்லாத காதல்:

என் காதல் இதயங்கள் இடம் மாறிய காதல் அல்ல 
உணர்வுகள் பரிமாறிய காதலும் அல்ல 
என் காதல் உன்னிடம் சொல்லப்படாமல் காத்திருக்கிறது 
இருந்தும் 
உன்னையே காதலிக்கிறேன் 
என் காதல் 
முகவரி நிரப்பப்படாத கடிதம் போன்றது 
உன்னை கண்டு உனை சேர காத்திருக்கிறது 
என் காதல் வழி தெரியா 
பாதை போன்றது 
முடிவில் நீ இருப்பாய் என்றே பயணிக்கிறேன் 
என் காதல் ஆள் இல்லா காட்டில் 
நிற்கும் மரம் போன்றது 
உன் நினைவென்னும் காற்று தீண்டித்தான் நான் உயிர் வாழ்கிறேன் 
என் காதல் நடு கடல் போன்று 
மிக அமைதியானது 
அதை விட மிக ஆழமானது 
என் காதலை நீ ஏற்காவிட்டாலும் 
உன் மீதான என் காதல் 
தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.... ❤

பதிவு : Kumar Kalpana
நாள் : 22-Oct-24, 2:20 pm

மேலே