எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதம் எரிகிறது பணம்!பணம்!பணம்! துரத்திச்செல்லும் வாழ்க்கை முகம் பார்க்க...

மனிதம் எரிகிறது

பணம்!பணம்!பணம்!
துரத்திச்செல்லும் வாழ்க்கை
முகம் பார்க்க நேரம் இல்லை
இனி மனம் பார்க்கவா நேரம்?

அன்பு என்றாலே காதல்
வேறு அர்த்தம் தெரியா
சில தலைமுறை தளிர்கள்.. ..

வேறு பாலின தோழமைக்கே
தவறான பார்வைகள் இருக்க -
புதிய முகங்களுக்கான மனிதத்தை
வரவேற்ப்பது எவ்வாறு????????

மரணம் கூட பாதிக்காவண்ணம்
மனங்கள் மரத்து விட்டதே-

ஏமாற்றி பிழைப்பது-புத்திசாலிதனம்
அறியாமையை பயன்படுத்திகொள்வது -ஜனநாயகம்
சமுதாயம் கற்ப்பிப்பவை

சுயநலம் ...சுயநலவாதிகள் .....
கல்லூரிகளின் தயாரிப்புகள்

வாழ்க்கையை கற்பிக்க
மறந்த - கல்விச்சாலைகள்

இச்சுழலில் மனிதத்தை
எதிர்பார்ப்பது- முட்டாள்தனம்

மனிதம்!
மனிதம்!
சதையற்ற எலும்பாய்....
எரிகிறது ! எரிகிறது!
மனிதம் எரிகிறது !!!!!????
---suri nagu

பதிவு : SURIYA NAGU
நாள் : 23-May-14, 8:28 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே